எந்த மெட்டில் பாடினாலும் தமிழ்த்தாய் வாழ்த்துதானே.. இது அண்ணாமலைக்கு தெரியாதா? மார்க்சிஸ்ட் ஆவேசம்
சென்னை: எந்த மெட்டில் பாடினாலும் அது தமிழ்த்தாய் வாழ்த்துதானே, இது கூடவா அண்ணாமலைக்கு தெரியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடியூ உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை உள்ளார்.

அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டி வருகின்றன. 50 லட்சம் பாஜகவினருடன் கர்நாடகாவில் காணொலியில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் பேசியிருந்தார். சிவமோகாவில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கே.ஈஸ்வரப்பாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது கடுப்பான கே.எஸ்.ஈஸ்வரப்பா மட்டும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை கேட்டுவிட்டு அதனை நிறுத்தி கர்நாடகா மாநிலத்தின் கன்னட வாழ்த்து கீதத்தை போடுமாறு தெரிவித்தார்.
இதனால் அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பே இந்த சம்பவம் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து அண்ணாமலை கூறுகையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் மெட்டு தவறாக இருந்ததால் அதை நிறுத்தியதாக அண்ணாமலை விளக்கமளித்திருந்தார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள;- கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ்த்தாய் வாழ்த்தினை இசைக்கவிட்டு பாதியில் நிறுத்தி அவமதித்துள்ளனர். அப்போது மேடையிலேயே நின்றுகொண்டிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த எதிர்வினையும் செய்யவில்லை.

சமூக ஊடகங்களில் இந்த காட்சியைப் பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர். இப்போது அண்ணாமலை பாடலின் மெட்டு சரியில்லை என்று வித்தியாச விளக்கத்தை கொடுத்துள்ளார். எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ்த்தாய் வாழ்த்து என அண்ணாமலைக்கு தெரியாதா? தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications