குட் நியூஸ்.. பைக் வாங்கினால் ரூ.10,000.. எலக்ட்ரிக் வாகனத்துக்கு சூப்பர் சலுகை.. மத்திய அரசு அதிரடி
சென்னை: எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை மக்கள் தொகை உயர உயர, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்தபடியே வருகிறது.. அதிலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாடு என்பது நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கிறது.

விற்பனை: பஜாஜ் ஆட்டோ, ஓலா, போன்ற நிறுவனங்கள், சமீபகாலமாகவே, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி + விற்பனையை பெருக்கி வருகிறது.. அதனால்தான் நம்முடைய நாட்டில், 2024ம் நிதியாண்டில் 8.50 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன..
எனினும், எலக்ட்ரிக் பைக்குகளின் பங்கு, அதிகமாக இல்லை.. இதற்கு காரணம், விலை அதிகமாக உள்ளதுடன், சார்ஜிங் ஸ்டேஷன்களும் அவ்வளவாக இல்லை. எனவே, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில், பொதுமக்களும் அவ்வஔவாக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
வாகன உற்பத்தி: அதனால்தான், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மத்திய அரசு அதிகரிக்கும் வகையில் பல மகத்தான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம்.. அதாவது, எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் என்று இந்த திட்டத்துக்கு பெயர்.. இதை சுருக்கமாக இஎம்பிஎஸ் (EMPS-2024) என்கிறார்கள்..
இந்த திட்டத்தின்கீழ் எலக்ட்ரிக் பைக் வாங்கினால், 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுமாம்.. கிட்டத்தட்ட 3 லட்சம் பைக்குகளுக்கு உதவித்தொகை வழங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளதாம். சிறிய 3 சக்கர வாகனங்கள் (இ-ரிக்ஷா) வாங்கினால், ரூ.25,000 வரை அரசின் உதவி வழங்கப்படும்.. பெரிய 3 சக்கர வாகனம் வாங்கினால், 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
பைக் : எலக்ட்ரிக் பைக்குகள், எலக்டரிக் 3 சக்கர வாகனங்களின் விற்பனைக்காகவே, ரூ. 500 கோடி மதிப்பிலான இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், எலக்ட்ரிக் பைக்குள், ட்ரை சைக்கிள்களின் விலைகள் குறையும் என்கிறார்கள்.. விலை குறைந்தாலே, பொதுமக்களின் தேவையும் அதிகரித்து, விற்பனையும் பெருகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications