பனையூரில் இன்று நடக்கும் தவெக கூட்டத்தில் விஜய் எடுக்கப்போகும் அந்த "ஒரே" முடிவு? மாஸ் அசைன்மென்ட்
சென்னை: தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் மிக முக்கியமான ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கிய கட்சியின் பயணத்தில் இன்றைய ஆலோசனை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், முதல் முறையாக களம் இறங்குகிறது விஜய்யின் தவெக.. அந்தவகையில் இன்றைய தினம் மாவட்ட செயலாளர்களை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்...

தமிழக வெற்றிக் கழகம்
இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில், கட்சியின் தற்போதைய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளைக் கழகங்களின் கட்டமைப்பு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து விஜய் மிகத் துல்லியமாகக் கேட்டறிய உள்ளதாக தெரிகிறது..
பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும் அவர் அறிவுறுத்தத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்கு அடிமட்ட அளவிலான கட்டமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் நிர்வாகிகளுக்குத் தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிகிறது.
தவெக விஜய்
தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து மாவட்ட ரீதியாகப் புகார்களை சேகரிக்குமாறு விஜய் கேட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பது அவரது முதன்மையான கருத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, மற்ற கட்சிகளின் செயல்பாடுகளைக் கவனிப்பதோடு நின்றுவிடாமல், தமிழக வெற்றிக் கழகத்தின் தனித்துவமான கொள்கைகளை மக்களிடம் எளிய முறையில் விளக்குவதற்குப் புதிய யுக்திகளைக் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தவுள்ளார்.
கட்சி நிர்வாகிகளுக்கு இடையே நிலவும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம், கோஷ்டி பூசல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் விஜய் தன்னுடைய மாவட்ட செயலாளர்களுக்கு கண்டிப்புடன் தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது..
மாவட்ட செயலாளர்கள்
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், குறிப்பாகப் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்க உள்ளார்.
கூட்டத்தின் இறுதியில், இன்னும் சில மாதங்களில் மாநிலம் தழுவிய அளவில் விஜய் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம் குறித்தும், இந்தப் பயணத்தின் போது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான திட்டங்கள் குறித்தும் இன்று விவாதிக்கப்படும்.
2026 தேர்தலே இலக்கு என்பதை மனதில் வைத்து, இப்போதிலிருந்தே களப்பணிகளில் தொய்வின்றி ஈடுபட வேண்டும் என்ற உற்சாகமான செய்தியுடன், இன்றைய கூட்டத்தை விஜய் நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.!
-
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்! -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications