ஒட்டுமொத்தமாய் பறிபோன 1 கோடி ஓட்டு! அட்ரஸ் மாறியது மட்டும் 66 லட்சம்! மீண்டும் சேர்க்கப்படுவார்களா?
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையின் போது மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள் ஆகியோரை தவிர்த்து, முகவரியில் இல்லாதவர்கள் என்ற காரணத்தால் நீக்கப்பட்ட 66 லட்சம் 44 ஆயிரத்து 881 பேரில் எத்தனை பேர் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்த SIR நடைமுறை சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 4 முதல் மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்றனர்.
முதலில் டிசம்பர் 4 வரை இருந்த அவகாசம் பின்னர் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போது தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடி 43 லட்சம் 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது.

வாக்காளர் பட்டியல்
இதில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதே நேரத்தில், மொத்தம் 97 லட்சம் 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 15 சதவீதத்தை தாண்டுகிறது. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, நீக்கப்பட்டவர்களில் 26 லட்சம் 94 ஆயிரத்து 672 பேர் இறந்தவர்கள். 3 லட்சம் 98 ஆயிரத்து 278 பேருக்கு இரட்டைப் பதிவு இருந்தது.
சிறப்பு தீவிர திருத்தம்
ஆனால் முகவரியில் இல்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டவர்கள் மட்டும் 66 லட்சம் 44 ஆயிரத்து 881 பேர். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே முகவரியில் இல்லாதவர்களா அல்லது தவறாக நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களும் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தங்களின் பெயர் தவறாக நீக்கப்பட்டதாக நினைக்கும் வாக்காளர்கள், படிவம் 6 மூலம் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். அதற்கான அவகாசம் டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை வழங்கப்பட்டுள்ளது.
படிவம் 6
பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் மற்றும் இடமாற்றத்துக்கு படிவம் 8 பயன்படுத்தப்படுகின்றன. ஆதார் எண் மட்டும் ஆவணமாக ஏற்கப்படாது. அதோடு சேர்த்து பிறப்பு சான்று அல்லது இருப்பிடச் சான்று போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவரை சுமார் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர் மட்டுமே பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த மனுக்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.
இறுதி பட்டியல்
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தீவிர திருத்தப் பணி நடைபெறாத காரணத்தால் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் நீக்கப்படாமல் இருந்தது. அதனால் தான் இத்தனை பெரிய எண்ணிக்கையில் நீக்கங்கள் நடைபெற்றுள்ளது. இருப்பினும் முகவரியில் இல்லாதவர்கள் என நீக்கப்பட்ட 66 லட்சம் பேரில் பெரும்பாலானோர் மீண்டும் இணைவது சாத்தியமில்லை என தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications