திமுக பிரச்சாரங்களில் இவ்வளவு கூட்டமா?.. அசர வைக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. சூப்பர் வீடியோ!
திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது தொடர்பான சாட்டிலைட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பது தொடர்பான சாட்டிலைட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. இதனால் இன்று கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில்தான் திமுக பிரச்சாரம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

என்ன இருக்கிறது
திமுகவின் பொதுக்கூட்டங்களில் கூடும் கூட்டம் குறித்த சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. திமுகவின் கூட்டத்திற்கு முன் ஒரு இடம் எப்படி இருந்தது, கூட்டத்தின் போது ஒரு இடம் எப்படி இருந்தது என்பது குறித்த விளக்கம் இதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
|
எவ்வளவு
அதன்படி திருநெல்வேலி, பொள்ளாச்சி, விழுப்புரம் பகுதிகளில் நடந்த திமுக பிரச்சாரம் குறித்து சாட்டிலைட் புகைப்படங்கள் இதில் வெளியாகி உள்ளது. அதாவது இந்த கூட்டம் நடந்ததற்கு முதல்நாள் அந்த இடம் எப்படி இருந்தது. கூட்டத்தின் போது அங்கு மக்கள் எவ்வளவு பேர் இருந்தனர் என்று இதன் மூலம் தெரியவந்து இருக்கிறது.

முக்கியம்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், செயற்கைகோள் புகைப்படம் மூலம், அங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் இருந்தது அப்படியே தெரிய வந்துள்ளது. வெள்ளையாக திட்டாக அங்கு மக்கள் அமர்ந்து இருப்பது இந்த புகைப்படங்களில் தெளிவாக தெரிகிறது. இது இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

அட இப்படியா?
இந்த புகைப்படங்கள் remote sensing தொழில்நுட்பம் மூலம் சாட்டிலைட்டை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக இயற்கை மாற்றங்கள், ஒரு குறிப்பிட்ட இடங்களை ஆராய்ச்சி செய்ய, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய இது பயன்படுத்தப்படும். இதை வைத்துதான் திமுக கூட்டத்தின் படங்களும் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications