இப்படி ஒரு வாய்ப்பு கனவிலும் கிடைக்காது.. பல ஆயிரம் குடும்பங்கள்.. வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான் நான் முதல்வன், என்று தமிழ்நாடு அரசு இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 23 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 2200+ நிறுவனங்கள், கல்வி அமைப்புகளில் இந்த மாணவர்கள் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். 250+ படிப்புகளை இவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

அதேபோல் இந்த திட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் பங்குதாரர்களாக உள்ளன. இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டம், லட்சோப லட்ச தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக்கும் - வேலைவாய்ப்புக்கும் கை கொடுத்து வருகிறது.
புதிய அறிவிப்பு: இந்த திட்டத்தின் கீழ் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவ, மாணவியர் - பெற்றோர் - பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பட்டப் படிப்புகள் - ஆராய்ச்சிப் படிப்புகள் மாணவர்கள் சேர்க்கை முதலான விவரங்கள் அனைத்தையும் வழங்கும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்படும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அறிவிப்பு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்.
பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் அறிவித்துள்ளார். அதன் விவரம்:- தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள், 184 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள்.
62 தொழில்நுட்பக் கல்லூரிகள்/சிறப்பு நிறுவனங்கள். 182 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் மாணவியருக்கு வெளிப்படையான பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அந்நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப்படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விரைங்கள்.
துறை அலுவலகங்களின் அமைவிடம். தனியர்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது. அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் தன்கு அறிந்த அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" (Help Desk) கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும். இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் (user friendy) அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications