11,922 கி.மீ தூரத்திற்கு.. தமிழ்நாட்டில் நடக்க போகும் சம்பவம்! இபி போர்ட் கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்
சென்னை: எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொண்டார்.
மாநிலத்தில் உள்ள முக்கிய மின் உற்பத்தி நிலையங்களின் தற்போதைய உற்பத்தித் திறன், உச்ச மற்றும் குறைவான மின் தேவை நேரங்களில் சுழற்சி மாற்ற உற்பத்தி நிலைகள் (Peak vs Off-Peak Generation), மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் (Power Purchase Agreement), மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மாநிலத்தின் மின் தேவையினை பொறுத்தமட்டில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 17,279 மெகாவாட் மற்றும் 18,584 மெகாவாட்டை எட்டியது. இந்த உச்சபட்ச மின் தேவையானது எவ்வித மின்தடையுமின்றி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 19,500 மெகாவாட், 21,943 மெகாவாட் மற்றும் 22,079 மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடைகாலத்தில் மாநிலத்தில் மின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்ய பல்வேறு ஆதாரங்களிலிருந்து மின்சாரத்தை ஒருங்கிணைக்கும் விரிவான திட்டத்தினை தமிழ்நாடு மின்சார வாரியம் வகுத்துள்ளது. அதன்படி வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் (அனல், புனல், காற்றாலை, சூரியசக்தி மற்றும் எரிவாயு) முழுத்திறனுடன் செய்யும் மின்சாரம் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எதிர்பாராதவிதமாக அனல் மின் நிலையங்களில் பழுது ஏற்படும் பொழுது கூடுதலாக கவனமாக கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுடன் மின்பரிமாற்றத்தின் வாயிலாக கிடைக்கப்பெறும் மின்சாரம் மற்றும் குறுகியகால ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தையும் ஒருங்கிணைத்து மின் தேவையினை பூர்த்தி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மின் தொடரமைப்பு மற்றும் மின் விநியோக உள்கட்டமமைப்பு மேம்பாட்டைப் பொறுத்தவரை, கோடைகால மின் தேவையை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 400 கி.வோ. திறன் உள்ளிட்ட 23 புதிய துணை நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு மின் வரப்பட்டுள்ளன. மேலும், 93 உயரழுத்த மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்பட்டு, மின்பளுவை சீராக்குவதற்காக 148 புதிய மின்னூட்டிகள் நிறுவப்பட்டு இயக்கத்தில் உள்ளன. மின்பகிர்மான மின்மாற்றிகளை பொறுத்தவரை, அதிக சுமையுள்ள 3,983 மின்மாற்றிகள், குறை மின்னழுத்த பிரச்சினை உள்ள 2,944 மின்மாற்றிகள் மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் 19,899 மின்மாற்றிகள் என மொத்தம் 17,826 புதிய மின்மாற்றிகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கோடைகாலத்தை எதிர்கொள்ளும் வகையில் 11,922 கி.மீ. நீளமுள்ள மின்கம்பிகள், 1,314 மின்மாற்றிகள், 1,895 கி.மீ. நீளமுள்ள புதைவட கம்பிகள் மற்றும் தமிழ்நாட்டில் தற்பொழுது +2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் மாணவர்களின் தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டும், கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் வகையிலும், தடையில்லா மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய, அனைத்து துணை மின் நிலையங்களிலும் வரும் 30.04.2025 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யவேண்டாம் என தலைமைப் பொறியாளர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், இரவு நேரங்களில் மின் தடங்கல் ஏற்பட்டால், அதனை உடனுக்குடன் சரிசெய்ய தேவையான பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து பொறியாளர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
மின் தடங்கல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் மின்னகம் வழியாக பெறப்படும் குறைகள் அனைத்திற்கும் உடனடி தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தி, புகார்களை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வலியுறுத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications