பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ்
சென்னை: தமிழகத்தின் தேர்தல் களம் அனலடிக்கிறது.. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் எந்தப் பக்கம் சாயப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.. இந்த சூழலில், பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி அழைப்பு மற்றும் கூட்டணி குறித்த கசிந்துள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளன..!!
திமுக அரசை எதிர்த்து வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்றால் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அந்த கட்சி சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ..

தற்போதைய ஆட்சி முறையை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக, தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் குடும்ப ஆட்சி வலுப்பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகிறது.. இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகள் பல திசைகளில் சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் புதிய அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அந்த கட்சியின் வாதமாக கூறப்படுகிறது..
பாஜக - தவெக கூட்டணி?
அதே நேரத்தில் விஜய் தனித்து போட்டியிட்டால் அது மறைமுகமாக திமுகவிற்கு சாதகமாக அமையலாம் என்றும் சில அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.. மாறாக அதிமுக மற்றும் பாஜக இணைந்த கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் சேர்ந்தால் உரிய தொகுதிகளும் அரசியல் மரியாதையும் வழங்கப்படும் என்று ஆஃபர்கள் தரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..
இதனிடையே, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு என்றால், விஜய் உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பகிரங்கமாக அழைப்பு, பலரது கவனத்தை பெற்று வருகிறது.
விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது திமுகவிற்கே சாதகமாக முடியும் என்பதால், பாஜக - அதிமுக கூட்டணியுடன் இணைந்தால் தகுதியான இடமும் உரிய மரியாதையும் வழங்கப்படும் என்றும் வலைவீசப்பட்டுள்ளது..
60 சீட் கேட்கிறாரா
இந்த அரசியல் நகர்வுகளுக்கு இடையே, முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சேனல் ஒன்றுக்கு தந்திருந்த பேட்டியானது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.. அதாவது, தவெக மற்றும் பாஜக இடையே டெல்லியில் ரகசியப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சுமார் 60 தொகுதிகள் வரை தவெக எதிர்பார்ப்பதாகவும், அதிமுக தலைமை 40 தொகுதிகள் வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்..
திருச்சி சூர்யா சொல்லும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஒருவேளை இந்த மெகா கூட்டணி அமைந்தால் அது திமுகவிற்குப் பெரும் சவாலாக அமையும்.. எனினும் உண்மையிலேயே விஜய் என்டிஏவுடன் கூட்டணி வைப்பாரா? அப்படி கூட்டணி வைப்பதால் விஜய்க்கு என்ன லாபம்?
விஜய் பாஜக கூட்டணிக்கு வந்தால், அவருக்குத் தேசிய அளவிலான அங்கீகாரம் மற்றும் மத்திய அரசின் ஆதரவு கிடைக்கலாம்.. மேலும், வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்படுவதால் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பும் பிரகாசமாகும்..
மதச்சார்பற்ற அரசியல் கொள்கை
ஆனால், விஜய்யின் "மதச்சார்பற்ற" அரசியல் கொள்கைக்கும் பாஜகவின் சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகள் ஒரு பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.. ஒருவேளை அவர் இந்த கூட்டணியில் இணைந்தால், அது அவரது தனித்துவமான அரசியல் அடையாளத்தைச் சிதைக்கக்கூடும் என்ற அச்சமும் ஒருபுறம் உள்ளது..
இருந்தாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுகவின் பிடி இறுகினால், தனது கட்சியைக் காப்பாற்றவும் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் விஜய் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று உள்ளார்.. பாஜக விரித்துள்ள இந்த அரசியல் வலையில் விஜய் விழுவாரா அல்லது தனது தனிப் பாதையில் பயணிப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா!












Click it and Unblock the Notifications