முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தொகுதியான பெரம்பூரில் சாலையில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தின் போது திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதன் அருகில் உள்ள சாலையில் இன்று திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, பள்ளம் ஏற்பட்டபோது அந்த இடத்தில் வாகனம் எதுவும் செல்லாததால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

Massive Sinkhole Suddenly Opens on Perambur Road in CM Vijay s Constituency Motorists Alarmed

பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில், வசந்த் தியேட்டர் அருகே உள்ள கே.எம். கார்டன் பகுதியில் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 5 அடி ஆழம் கொண்ட இந்தப் பள்ளம், சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து மெட்ரோ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இப்பகுதியில் ஏற்கனவே சில முறை பள்ளம் விழுந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளம் விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டிலும் இதே பேரக்ஸ் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதியும் இதே பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.

தொடர்ந்து மெட்ரோ பணிகளின் காரணமாக சாலையில் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற பள்ளம் மீண்டும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+