டைவ் அடித்த நுங்கம்பாக்கம்.. 200 வருடங்களில் நடக்கும் அபூர்வ நிகழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: சென்னையில் இன்று நிலவும் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகரித்து வந்த வெயிலுக்கு இடையில் தற்போது திடீரென மழை பெய்ய தொடங்கி உள்ளது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இப்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய முக்கிய காரணம் உள்ளது. காலையில் இருந்து மிக கடுமையாக வெயில் அடித்தது. இந்த நிலையில் தற்போது திடீரென மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று நிலவும் வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தனது போஸ்டில், சென்னை மாநகரில் உள்ள அனைத்து ஸ்டேஷன்களும் மதியம் 1.00 மணிக்கு 40 டிகிரி செல்ஸியஸை தாண்டிவிட்டன.
நுங்கம்பாக்கத்தில் 40.5 டிகிரி செல்ஸியஸை ஐ தாண்டியுள்ளது. அதே சமயம் MRC நகர் போன்ற கடலோரப் பகுதிகள் கூட 40.2 டிகிரி செல்ஷியஸில் கொளுத்துகிறது. நுங்கம்பாக்கத்தில் 2.30 மணி அளவில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாணிப்படி, 42.1 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது.
41.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. சென்னையில் இன்று மிக மோசமான வெப்பநிலை நிலவியது. நுங்கம்பாக்கம் ஜூன் மாதங்களில் கடந்த 200 வருடங்களில் 5 முறை மட்டுமே 42 டிகிரிஸ் செல்ஸியஸை கடந்து உள்ளது. இந்த வருடம் ஏற்கனவே ஒரு முறை நுங்கம்பாக்கத்தில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகிவிட்டது. இன்று மீண்டும் நுங்கம்பாக்கம் அதை கடக்குமா என்று பார்க்கலாம்
நுங்கம்பாக்கத்தில் கடந்த 200 வருடங்களில் பதிவான வெப்பமான ஜூன் நாட்கள் பின்வருமாறு
-----
- 03.06.1948 - 43.3 டிகிரி செல்ஸியஸ்
- 01.06.1983 - 42.6 டிகிரி செல்ஸியஸ்
- 04.06.2003 - 42.5 டிகிரி செல்ஸியஸ்
- 03.06.2012 - 42.4 டிகிரி செல்ஸியஸ்
- 06.06.2003 - 42.3 டிகிரி செல்ஸியஸ்
- 04.06.2023 - 42.1 டிகிரி செல்ஸியஸ்
- 07.06.2023 (இன்று) - இது 42 டிகிரி செல்ஸியஸை தாண்டுமா ? என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் செய்துள்ள போஸ்டில், அம்பத்தூர்-கொரட்டூர்-பாடி-அண்ணாநகர் மேற்கு-பெரம்பூர் பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் கடற்காற்றின் நகர்வு காரணமாக சில இடங்களில் மழை பெய்கின்றன் வீசுகின்றன. தீவிரமான அதே சமயம் குறுகிய கால மழை இங்கே பெய்யலாம்.
சென்னை மைய சிட்டி பகுதியில் நல்ல மழை பெய்கிறது. நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலை இதனால் 41+ டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் இருந்து 28 டிகிரி செல்ஸியசாக டைவ் அடித்து குறைந்துள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications