Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூனைக்குட்டி வருதா? திமுகவால் நெளியும் பாஜக? கோவையில் "சிக்கும்" ரஜினி.. "ஆண்டவருக்கே" அது வெளிச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் வரப்போகிறது.. மீண்டும் லைட்டுக்குள் வந்துவிட்டார் ரஜினிகாந்த்.. மீண்டும் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் செய்திகள் கசிய துவங்கிவிட்டன.. இப்போதும் அப்படியே ஒரு செய்தி காற்று வாக்கில் இணையத்தில் சுற்றிகொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் லக்னோ சென்று, உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தை பார்த்தார்.. பின்னர், உபி முதல்வர் யோகி வீட்டிற்கு சென்று, யோகியின் காலைத்தொட்டு வணங்கினார்.

Master plan by DMK MK Stalin and Do you know Rajinis Son in law may contest in Coimbatore, what is the Kamals plan

வீடியோ: இதுதொடர்பான வீடியோ வெளியாகி, பரபரப்பையும், சலசலப்பையும், சர்ச்சையையும், கிளப்பிவிட்டது. நட்பு ரீதியாக முதல்வர் யோகியை சந்தித்தாலும், காலில் ஏன் விழவேண்டும்? என்ற கேள்வி வெடித்தது.

"ஒரு சந்நியாசியாக இருக்கட்டும், யோகியாக இருக்கட்டும் அவர்கள் நம்மைவிட சின்ன வயதுகொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன்" என்று ரஜினி விளக்கமளித்தாலும், இந்த நிகழ்வு பல சந்தேகத்தை அப்போது ஏற்படுத்தியது. நம்முடைய ரஜினி, இப்படியெல்லாம் காலில் விழலாமா? என்று பலரும் ஆதங்கப்பட்டனர்.

திருமாவளவன்: இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால், அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருந்தால், யோகி அல்லவா முதல்வர் ஆனது போல ஆகியிருக்கும் தமிழ்நாடு. தமிழக மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பை ரஜினிகாந்த் மீது வைத்திருந்தோம்? என்று ஆதங்கப்பட்டார்.

இதே கேள்வியை அதிமுக ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, "அதாவது, ரஜினி மனசுல என்ன இருக்குதுன்னு எனக்கும் தெரியாது.. உங்களுக்கும் தெரியாது.. அது அவருக்கு மட்டும்தான் தெரியும்.. எப்படியிருந்தாலும், பூனை ஒருநாள் வெளியே வந்துதானே ஆகும்? அந்த பூனை வெளியே வரும்போது, நான் இதுக்கு பதில் சொல்றேன்" என்கிறார் ஜெயக்குமார்.

ரஜினி ஆதரவு: அதேசமயம், எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த முறையாவது, ஏதாவது ஒரு விதத்தில், ரஜினியை பாஜக நிச்சயம் பயன்படுத்தி கொள்ளும் என்றும் கணிப்புகள் கசிந்தன.

இப்போது தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது.. திமுக கூட்டணி மட்டும்தான் பலமாகவும், உறுதியாகவும் கூட்டணியை வைத்துள்ளது.. இதில், கமல்ஹாசன் இணைவதாக உள்ளது.. ஆனால், இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் கமலுக்கு அனுப்பப்படாமலேயே உள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த முறையும் கோவை தொகுதியை குறிவைத்துள்ளாராம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்.

வானதி சீனிவாசன்: இதே கோவையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், மூத்த தலைவருமான வானதி சீனிவாசனிடம் மிகவும்குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.. அதனால்தான், இந்த முறையும் கோவையையே கமல் கேட்டு வருவதாக தெரிகிறது. எப்படியும் திமுக தனக்கு கோவையை ஒதுக்கும் என்ற நம்பிக்கையில், மய்யத்தினரும் களப்பணியில் கோவையில் இறங்கிவிட்டார்கள்.

பல்லடம்: இந்த நேரத்தில்தான், இடி போல அந்த செய்தி கசிந்துள்ளது.. கோவை தொகுதியில், திமுக சார்பில் ரஜினிகாந்தின் மருமகன் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது, பல்லடம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின், தம்பி மகன்தான், ரஜினியின் மருமகனான விசாகன்.. ரஜினி மகள் சவுந்தர்யாவின் கணவர் ஆவார்.

திமுக குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலும், ரஜினியின் மருமகன் என்பதாலும், இந்த முறை, விசாகனை களமிறக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். விசாகனை தேர்தலில் போட்டியிட செய்தால், ரஜினி ரசிகர்களும், இறங்கி வேலை பார்ப்பார்கள்.. என்று திமுக கணக்கு போடுகிறதாம்..

கொங்கு திமுக: தற்சமயம் செந்தில் பாலாஜி கொங்குவில் இல்லாத சூழலில், கொங்குவில் அபரிமிதமாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், பரிச்சயமானவரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறதாம். அப்படியே, விசாகனை தேர்தலில் களமிறக்கினால், கோவை தொகுதியை அவருக்கு ஒதுக்கலாம் என்றும் சலசலக்கப்படுகிறது. இந்த செய்திதான், மய்யத்தில் இடியாய் இழுந்துள்ளதாம்.

இந்த முறை ரஜினி வாய்ஸ், பாஜகவுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவிரும் சூழலில், திடுதிப்பென விசாகனை, திமுக களமிறக்குவதாக தகவல்கள் வெளியாவது பரபரப்பை தந்து வருகிறது.

ரஜினி வாய்ஸ்: ஒருவேளை நிஜமாகவே, விசாகனுக்கு சீட் தந்து கோவையில் களமிறங்க செய்தால், ரஜினி யாருக்கு ஆதரவாக வாய்ஸ் தருவார்? கோவையில் பாஜக சார்பில் போட்டியிடுபவர்கள் நிலை என்ன? அதைவிட முக்கியமாக கமல் என்ன செய்ய போகிறார்? எதுவுமே தெரியவில்லையே.. "ஆண்டவருக்கே" வெளிச்சம்..! பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+