Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகர் "இங்கே" வந்துட்டாராமே.. எடப்பாடியே எதிர்பார்க்கலை.. மாஸ்டர் ஸ்கெட்ச்கள்.. அடுத்து என்ன?

திமுகவுடன் எடப்பாடிக்கு ரகசிய உறவு இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் இவர்கள் எப்போது இணைவார்கள் என்ற தகவல் ஒன்று அதிமுகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.. மற்றொருபுறம் ஓபிஎஸ் வியூகங்களை கண்டு, தென்மண்டலம் மலைத்து வருகிறது.

தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவு வந்ததில் இருந்தே, அப்செட்டில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்து சட்டரீதியான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனினும் அப்பீலுக்கு சென்றுள்ளதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது..

 பச்சை சிக்னல்

பச்சை சிக்னல்

மற்றொருபக்கம் ஓபிஎஸ் தெம்பாக இருக்கிறார்.. கூலாக இருக்கிறார்.. கடந்த சில நாட்களாகவே உற்சாகத்துடனும், குஷியுடனும் வலம் வருகிறார்.. பறந்து பறந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.. ஏகப்பட்ட பிளான்களை கையில் வைத்திருக்கிறார்.. வெளிப்படையாகவே டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பதிலுக்கு டிடிவி தினகரனும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், உற்சாகத்துடன் காணப்படுகிறார்.. தினமும் ஏதாவது ஒரு வகையில் பச்சை சிக்னல் ஓபிஎஸ் பக்கமிருந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

 ப்ராஜக்ட் A

ப்ராஜக்ட் A

அந்தவகையில், ஆறுக்குட்டி திமுகவுக்கு பறந்துபோனார்.. அய்யப்பன் உட்பட சில முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் வந்துள்ளனர்.. 2 தென்மண்டல மாஜி அமைச்சர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.. கொங்கு மண்டல மாஜி அமைச்சருக்கும் தூது விடுக்கப்பட்டுள்ளது.. பாக்யராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்துவிட்டார்.. அதுபோலவே, நடிகர்கள் ராமராஜன், தியாகு, அஜய் ரத்தினம் என சினிமா பிரபலங்கள் பலரும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்... வரிசையாக நடிகர்கள் பட்டாளம் ஓபிஎஸ்ஸுக்கு ஏன் இந்த நேரத்தில் ஆதரவு தர வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது..

 ப்ராஜக்ட் B

ப்ராஜக்ட் B

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பிரபல நடிகர் ஒருவர் தென்மண்டலங்களில் பிரச்சாரம் செய்ய போவதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி பரவியது.. தன் ஆதரவாளர்களையும், நிர்வாகிகளையும் வைத்து, தன்தரப்பு நியாயங்களை பொதுமக்களிடம் எடுத்து வைப்பதைவிட, மக்களாலேயே நன்று அறியப்பட்ட பிரபலத்தை வைத்து, பிரச்சாரம் மேற்கொண்டால், அது நிச்சயம் தங்கள் தரப்புக்கு பலத்தை தரும் என்று ஓபிஎஸ் தரப்பு நம்புகிறதாம்.. இதற்காகவே பிரபல நடிகர் ஒருவரை களமிறக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

 ராமராஜன் + ராதாரவி

ராமராஜன் + ராதாரவி

பொதுவாக, தேர்தல் சமயங்களில் மட்டுமே இத்தகைய நட்சத்திர பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வரும்நிலையில், இதற்கெல்லாம்கூட பிரச்சாரமா? என்று ஆச்சரியமாக இந்த செய்தி பேசப்பட்டது.. மேலும், அந்த நடிகர் ஏற்கனவே பழைய அதிமுகவில் இடம் பெற்றவரும்கூட என்று ஒரு க்ளூ கிடைக்கவும், அவர் யாராக இருக்கும் என்ற குழப்பம் தென்மண்டல மக்களை குழப்பியடித்தது.. ஒருவேளை, நடிகர் செந்திலா? ராமராஜனா? ராதாரவியா? என்ற யூகங்கள் பறந்தன.. இந்நிலையில், ராமராஜன், தியாகு, அஜய் ரத்தினம், என வரிசையாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருவதும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

 பிரபல நடிகர்

பிரபல நடிகர்

அதேசமயம், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவது, எடப்பாடி தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்றாலும், அந்த பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அதென்ன சினிமா கம்பெனியா? இத்தனை பேர் வந்து சேருகிறார்கள்?" என்று ஓபிஎஸ் தரப்பை கிண்டலடித்து வருகிறார்களாம்.. இன்னும் நிறைய பிரபலங்கள் அடுத்தடுத்த நாட்களில் ஓபிஎஸ் பக்கம் வரக்கூடும் என்றும் கூடுதல் தகவல்கள் பரபரத்து வருகின்றன...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+