Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டோட்டலா மாறுதோ.. பாஜக போடும் அஸ்திரக்கோலம்.. பலே பலே கணக்கு.. ரெடியாகும் திமுக.. சாய்கிறதா "மய்யம்"?

கமல்ஹாசன் இந்த முறை யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் இந்த முறை யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு களத்தில் எகிறி உள்ளது.. அத்துடன், கூட்டணி தொடர்பாக பாஜக போடும் கணக்கும், கவனத்தை திருப்பி வருகிறது.

திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது.. எனினும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "வலுவான கூட்டணி வைத்து போட்டியிடுவோம்" என்று கூறியுள்ளார்.

அந்தவகையில், திமுகவுடன் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை, கமல் திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் கடந்த ஒரு மாத காலமாகவே நிலவி வருகிறது.

 பல தூண்கள்

பல தூண்கள்

மநீம பொறுத்தவரை, இந்த முறை தேர்தலில் தங்களை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும், தங்களின் எதிர்கால அரசியலை தீர்மானிக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், தனித்து போட்டியிடுவோம் என்று துணிந்து சொல்ல முடியாத நிலைமை மய்யத்துக்கு சூழ்ந்துள்ளது.. இன்னொரு காரணமும் உள்ளது.. அன்று மய்யத்தை தாங்கி பிடித்த பல தூண்கள் இன்று அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்கள்.. தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்விகளில் தொண்டர்களும் சோர்ந்து உள்ளனர்.. அதனால், கூட்டணி என்ற விஷயத்தை தவிர்க்க முடியாத நிலைமை, கமலுக்கு ஏற்பட்டுள்ளது.

 கால்குலேஷன் 2

கால்குலேஷன் 2

கமலுக்கு களத்தில் இருக்கும், இரண்டரை சதம் வாக்குவீதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் திமுகவுக்கு உள்ளது.. இதற்கு காரணம், திமுக வலுவாகவே இருந்தாலும்கூட, வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க, மெகா எதிர்ப்பு கூட்டணி ஒன்று இங்கு தேவையாக இருக்கிறது.. அந்தவகையில், மநீம எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற அசைன்மெண்ட் உதயநிதியிடம் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.. சீட் விவகாரமும், தொகுதி உடன்பாடும் மறைமுகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 1+1 அனுமானம்

1+1 அனுமானம்

1+1 சீட் ஒதுக்கீட்டுக்கு மய்யம் உடன்படாவிட்டால், 2 மக்களவை தொகுதிகளை ஒதுக்க திமுக யோசித்து வருவதாக சொல்கிறார்கள்.. எப்படியும், பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே களமிறக்கவும் திமுக தரப்பு திட்டமிட்டு வருகிறதாக தெரிகிறது.. இப்படி எத்தனையோ யூகங்களும், கணிப்புகளும் தினம் தினம் முளைத்து வந்து கொண்டிருந்தாலும், இதுவரை எதுவுமே உறுதியாகவில்லை.. காரணம், நேற்று முன்தினம் மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து கூறியிருந்தார்..

 கூட்டணி

கூட்டணி

அதாவது, ஓபிஎஸ் + எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒருங்கிணைந்து, அந்த கூட்டணியில் டிடிவி தினகரன் + டாக்டர் கிருஷ்ணசாமி+ பாஜக + பாமக + வாசன் + தேமுதிக இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தால், 2024 தேர்தலில், மிகப்பெரிய வலிமை வாய்ந்த கூட்டணியாக இருப்பார்கள்.. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், 10 இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.... அமமுக + ஓபிஎஸ் இவர்களை எல்லாம் மட்டுமே நம்பி பாஜக தேர்தலை சந்தித்தால் சறுக்கலாகிவிடும்.. ஒருங்கிணைந்த அதிமுக உருவானால், திமுக + விசிக + இடதுசாரி கூட்டணி வெல்வது கடினம்தான்.. எப்போதுமே ஒருங்கிணைந்த அதிமுக என்பது திமுகவுக்கு ஆபத்துதான்.. அதிமுக கூட்டணியில் கமலும் சேருவார் என்கிறார்கள்" என்று தன்னுடைய அனுமானங்களை கூறியிருந்தார்.

 தூண்டில்

தூண்டில்

அந்தவகையில், கமலுக்கு அதிமுக தரப்பும் தூண்டில் போடுவதாக தெரிகிறது.. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை கமல் அறுவடை செய்யக்கூடும் என்று பாஜக அதிமுக தரப்பு யோசிக்கிறது.. அதேபோல, பாஜக இன்னொன்றையும் யோசிக்கிறது.. அதாவது, எடப்பாடி பழனிசாமியை பாஜகவை எதிர்க்க வைத்து, திமுகவையும் எதிர்க்க வைத்து, நாம் தமிழர் கட்சியையும் எதிர்க்க வைத்து, பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிப்பதன் மூலமாக பாஜகவுக்கு பிளஸ் ஆக இருக்கும் என்று நினைக்கிறது.. இந்த லிஸ்ட்டில் கமலையும் கொண்டு வர முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.

 டைம் ஓவர்?

டைம் ஓவர்?

திமுகவுடன், இந்தமுறை, மய்யம் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக மட்டுமே அரசல் புரசலாக செய்திகள் கசிந்து வரும்நிலையில், இதுவரை கூட்டணி குறித்து எந்த ஒரு முடிவு எட்டப்படாத நிலையும் உள்ளது.. அதனால்தான், அதிமுக கூட்டணியில் கமல் இடம்பெற வாய்ப்புள்ளதோ? என்றும் சிலர் சந்தேகத்தை கிளப்பி விட்டு விடுகிறார்கள்.. யாருடன் கூட்டணி என்றாலும், 10 முதல் 15 சீட்டுக்களை மய்யம் கேட்கும் என்றும் சொல்கிறார்கள்.. தேர்தலுக்கு நிறைய டைம் இருப்பதால், இப்போதே எந்த முடிவுக்கும் வர முடியாத சூழலும் உள்ளதால், அனுமானங்களும், எதிர்பார்ப்புகளும், தினம் தினம் எகிறி வருகின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+