Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரண்ட தினகரன்.. எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திர வலையில் "ராஜ பரம்பரை" திமிங்கலம்? "மாணிக்கம்" வருவாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் மாஸ்டர் பிளானை பார்த்து, அதிர்ந்து போயுள்ளதாம் அமமுக தரப்பு.. தென்மண்டலங்களில் எப்படியாவது வாக்குகளை அள்ள வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடனான சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ்ஸின் "கிரேப்" எகிறி உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில் 2 வகையான மாற்றங்கள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.

நடந்து முடிந்த திருச்சி மாநாடு, மிகப்பெரிய நம்பிக்கையை ஓபிஎஸ்ஸூக்கு ஏற்படுத்தியுள்ளதால், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள போகிறாராம்..

Masterplan by edapadi palanisamy and who AIADMK increase vote bank in southern regions

வடமாவட்டம்: அதேபோல, விரைவில் கொங்குவில் மாநாடு கூட்டப்போகிறாராம் ஓபிஎஸ்.. இந்த மாநாட்டுக்கு தென்மண்டலம், டெல்டா, வடமாவட்டம் என எல்லா பக்கத்திலிருந்தும் ஆதரவாளர்களை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளாராம். இதற்கெல்லாம் டிடிவி தினகரனின் ஆதரவும் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்றும் பலமாக நம்புவதாக தெரிகிறது. தன்னுடைய பலத்தை மேலும் கூட்டிக்கொள்ள, ஓபிஎஸ்ஸுக்கு தினகரனின் ஆதரவும் தேவையானதாக மாறியுள்ளது.

இரண்டாவதாக, அணி தாவல்கள் இனி கட்டுப்படுத்தப்படும் என்றே நம்பப்படுகிறது.. அதாவது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர், தினகரன் - ஓபிஎஸ் பக்கம் தாவ யோசித்து வரும் நிலையில், அந்த எண்ணம் தற்போது கைவிடப்பட்டு வருகிறதாம். அதேபோல, எடப்பாடி பக்கம் போய்விடலாமா என்று ஓபிஎஸ் தரப்பில் ஊசலாட்டத்தில் இருந்தவர்களும், தங்கள் ஓபிஎஸ் நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறார்களாம்.

அதேபோல, டிடிவி தினகரன் தரப்பில் இருப்பவர்களை எடப்பாடி பழனிசாமி அசால்ட்டாக தன் பக்கம் இழுத்து வந்த நிலையில், அந்த இணைப்புகளுக்கு தற்போது குறையும் என்றும் நம்ப்படுகிறதாம்.. ஆக மொத்தம், ஓபிஎஸ் + தினகரன் சந்திப்பானது தென்மண்டல மக்களுக்கு ஒரு பூஸ்ட்டாக அமைந்து வருகிறது.

மதுரை மாநாடு: எனினும், இதை எப்படி எடப்பாடி பழனிசாமி சமாளிக்க போகிறார்? என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.. விரைவில் மதுரையில் மாநாடு நடத்தப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தாலும், தினகரனுக்கு செக் வைத்தால் மட்டுமே, அமமுகவின் செல்வாக்கை தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறாராம்.. இதற்காக, தென் மண்டல தளபதியான "ராஜகுடும்பத்தை" சேர்ந்தவரிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறதாம்.. அதிமுகவின் "மணியான மாஜி" ஒருவர் இந்த பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறாராம்..

Masterplan by edapadi palanisamy and who AIADMK increase vote bank in southern regions

அதாவது, கடந்த ஒரு வருட காலமாகவே, பலபேரை கட்சியிலிருந்து ஓரங்கட்டிவிட்டாராம் தினகரன்... ஆனால், அந்த ராஜபுள்ளியை நம்பித்தான் கோயில்பட்டி தொகுதியில் கடந்த முறை வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார் தினகரன்.. ,அன்று டிடிவி தினகரனின் தளபதிகளில் முக்கியமானவராகவும் திகழ்ந்த ஜமீன்தார் அவர்.. கயத்தாறுவின் புகழ் "மாணிக்கமும்"கூட.. ஆனால், சமீபகாலமாகவே தினகரனுடன் அவர் முரண்பட்டு நிற்பதாக தெரிகிறது..

Masterplan by edapadi palanisamy and who AIADMK increase vote bank in southern regions

திமிங்கலம் சிக்குமா?: இதைதான், அதிமுக தலைகள் மோப்பம் பிடித்துவிட, அவரை தொடர்பு கொண்டு பேசி அதிமுகவுக்கு இழுக்கும் வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்களாம். இவரை அதிமுகவுக்குள் கொண்டுவந்துவிட்டால், தென் மாவட்டங்களில் தினகரனின் செல்வாக்கு குறைந்துவிடும் என்றும் கணக்கு போடுகிறார்களாம்.. ஆனால், இதற்கும் எதிர்க்குரல்கள் அதிமுகவுக்குள்ளேயே மெல்ல எழ துவங்கினாலும், அதிமுக மேலிடம் இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.. இதையெல்லாம் கேட்டு தினகரன் தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+