"குலுங்குது" சென்னை.. ஆட்டத்தை கலைத்தாடும் எடப்பாடி.. முளைத்த சிக்கல்கள்.. நாளை என்னதான் நடக்க போகுது
சென்னை: அஇஅதிமுகவில் முக்கிய முடிவுகள் நாளைய தினம் எடுக்கப்படும் என்று தெரிகிறது.. இதையடுத்து தமிழக அரசியல் களமே ஆர்வத்துடன் அனலடித்து கொண்டிருக்கிறது.
உட்கட்சி விவகாரங்கள் முதல் சட்டசிக்கல்கள்வரை அனைத்தையும் நொறுக்கி தள்ளி கொண்டிருக்கிறார் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், உறுப்பினர் சேர்க்கையே நடைபெறாமல், உறுப்பினர் சேர்க்கையே முற்றுப்பெறாமல், உறுப்பினர்களால் அல்லாமல், தலைமைக்கழக நிர்வாகிகளால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் சில அதிமுக சீனியர்களிடமிருந்து கிளம்பி வருகின்றன.

தேர்தல் ஆணையம்: அதேசமயம், பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான். அதாவது, திருத்தப்பட்ட தேர்தல் விதிகளின்கீழ் தேர்தல் நடந்தது என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும்கூட, திருத்தப்பட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை ஒப்புதல் தந்ததில்லை..
திருத்தப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் தராத ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை, எப்படி தேர்தல் ஆணையம் இந்த முறையும் ஒப்புதல் தரும்? நிச்சயம் தராது என்கிறார்கள்.. எனினும் எடப்பாடியின் கைக்கு கிட்டத்தட்ட அதிமுக சென்றுவிட்டது.. தேர்தல் ஆணையம் முடிவு என்னவாக இருக்க போகிறது? பாஜக இதில் எத்தகையை முடிவு எடுக்க போகிறது? ஒருவேளை ஆணையம் ஒப்புதல் தந்துவிட்டால், ஓபிஎஸ் அரசியல் என்னவாகும்? என்ற அடுத்தடுத்த சந்தேகங்கள் வலுவாகி வருகின்றன.. இது தொடர்பாக பேசவே, கடந்த வாரம் மூத்த தலைவர் தம்பிதுரை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது..
தேர்தல் ஆணையம்: மற்றொருபக்கம், அதிமுக நிர்வாகத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அணுகி உள்ளார்... அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன... அதுபோன்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை மதியம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இது என்பதால், கட்சிக்குள் மிகுந்த எதிர்பார்ப்பு கூடிவருகிறது.. அநேகமாக நாளைய தினம் நடக்க போகும் கூட்டத்தில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதலும், அங்கீகாரமும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது..
உறுப்பினர் சேர்க்கை: மேலும் கட்சியின் கொள்கை ரீதியிலான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் செயற்குழு கூட்டத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் அதிமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தல் கமிஷனில் புதிய பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்க போவதாக தெரிகிறது..
எனவே, நாளைய தினம் மிக மிக முக்கியமான கூட்டம் என்பதால், கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்... நாளை செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது...
சீட் ஒதுக்கீடு: இதைதவிர, கர்நாடக சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் எத்தனை தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்றும் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. அப்படி பாஜக தங்களுக்கு சீட் ஒதுக்கிவிட்டால், வேட்பாளர்கள் யார் பற்றியும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.. ஆகமொத்தம், நாளை தினம் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
எனினும், கர்நாடக தேர்தல் விஷயத்தில் பாஜக, அதிமுகவுக்கு சீட் தருமா என்பது தெரியவில்லை.. காரணம், அதிமுகவுக்கு 3 சீட் தரவேண்டும் என்ற பிளானில் உள்ளதாம் அதிமுக.. ஆனால், கர்நாடக தமிழர்களிடம் அதிமுகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற புள்ளைவிபரங்களை, பாஜக மேலிடம் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பதால், அதிமுகவுக்கு கர்நாடக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்று தெரியவில்லை.
"இந்த முறை நீங்கள் போட்டியிட வேண்டாம். பாஜவை ஆதரியுங்கள்" என்று மட்டும் பாஜக மேலிடம் அதிமுகவை கேட்டுக் கொள்ளும் என்றும் தெரிகிறது.. ஒருவேளை 3 சீட் இல்லாவிட்டாலும், அதிமுகவுக்கு அட்லீஸ்ட் 1 சீட்டாவாவது ஒதுக்குங்கள் என்று கேட்கும் முடிவில் இருக்கிறதாம் அதிமுக மேலிடம்.. இதுகுறித்து நாளைய தினம், செயற்குழுவில் என்ன பேசப்போகிறார்கள் என்று தெரியவில்லை.. இதற்கான ஏற்பாடுகளும், ஆலோசனைகளும் இப்போதே ஆரம்பமாகி உள்ளதால், சென்னை அதிமுக பரபரப்பாகி உள்ளது.. அத்துடன், நாளைய கூட்டம் அதிக ஆர்வத்தை இப்போதே ரத்தத்தின் ரத்தங்களுக்கு தந்து கொண்டிருக்கிறது...!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications