மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்
சென்னை: கடலடியில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியம்: மத்தி மீனின் மகத்துவமும் மருத்துவப் பயன்களும்..
கடல் உணவுகளில் எத்தனையோ விலையுயர்ந்த மீன்கள் சந்தையில் கொட்டிக்கிடந்தாலும், சாமானியர்களின் சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படும் மத்தி மீன் இன்று உலகளவில் ஒரு மாபெரும் ஆரோக்கியப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு காலத்தில் பலராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்தச் சிறிய வகை மத்தி மீன்கள், தற்போது மருத்துவ குணங்களின் பெட்டகமாக பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக, நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகத் திகழும் மத்தி மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நவீன மருந்துகளை விடவும் சக்திவாய்ந்த இயற்கை அரணாகச் செயல்படுகின்றன..
மத்தி மீன் அதிசயம்
மத்தி மீனின் முதன்மையான சிறப்பு அதில் செறிந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகும். இந்த அமிலம் இதயத் தமனிகளில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
இதில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டி, ஞாபக மறதி நோயான அல்சைமர் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கின்றன.. குறிப்பாக, வளரும் குழந்தைகளுக்கு மத்தி மீனை உணவில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் கவனிப்புத் திறன் மற்றும் கற்கும் ஆர்வம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
மத்தி மீனின் சத்துக்கள்
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், மத்தி மீனை உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலின் சுரப்பைக் கட்டுக்குள் வைக்கப் பெரிதும் உதவுகிறது. இது உடலில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை முறைப்படுத்துவதால், நீரிழிவு நோயின் தீவிரம் கணிசமாகக் குறைகிறது. இதனாலேயே அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மீனுக்கான மவுசு எப்போதும் குறையாமல் இருக்கிறது..
ஊட்டச்சத்து பட்டியலை எடுத்துக்கொண்டால், மத்தி மீன் ஒரு முழுமையான டயட் உணவாகும். 100 கிராம் மத்தி மீனில் சுமார் 20.9 கிராம் புரதம், 10.5 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி
குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் D மற்றும் B12 ஆகியவை எலும்பு வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் அத்தியாவசியமானவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மத்தி மீன் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது. இதில் உள்ள செலினியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இரத்த உறைதலைத் தடுத்து, உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிராணவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்கின்றன..
எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மத்தி மீனுக்கு இணையான ஒன்று கிடையாது என்றே சொல்லலாம். இதன் செல்களில் இருந்துதான் உலகத்தரம் வாய்ந்த கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள அயோடின் சத்து முன்கழுத்துக் கழலை போன்ற தைராய்டு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. மேலும், கண் பார்வைக் குறைபாடுகளைத் தடுப்பதிலும், சருமத்தைப் பொலிவாக வைத்திருப்பதிலும் மத்தி மீன் முக்கியப் பங்கு வகிக்கிறது..
ஊட்டச்சத்து ஆதாரம்
விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக மத்தி மீனை ஒதுக்கித் தள்ளுவது ஆரோக்கியத்தை நாமே தள்ளி வைப்பதற்கு சமம்.
செயற்கை வைட்டமின் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை விட, இயற்கையாகக் கிடைக்கும் இந்தச் சிறு மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வது நீண்டகால நலத்திற்கு உகந்தது. குறிப்பாக, வளரும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாகும். எனவே, சந்தைக்குச் செல்லும்போது பெரிய வகை மீன்களைத் தேடி ஓடுவதை விடுத்து, ஆரோக்கியம் செறிந்த மத்தி மீன்களைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்..!!
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications