பி.இ.டி பீரியடை கணக்கு டீச்சர்கள் கடன் வாங்கின காலம் முடிஞ்சுது.. சட்டசபையில் அமைச்சர் உதயநிதி கலகல!
சென்னை : பள்ளிகளில் பி.இ.டி பீரியட்களை கணக்கு, அறிவியல் பாட டீச்சர்கள் கடன் வாங்கி சிலபஸை முடித்து விடுவது போல, விளையாட்டுத்துறையை மற்ற துறைகள் ஆக்கிரமிக்கும் நிலை முன்பு இருந்தது. இப்போது பி.இ.டி ஆசிரியர்கள், மேத்ஸ், ஃபிசிக்ஸ் கிளாஸை எல்லாம் அவர்கள் கடன் வாங்கி நடத்தும் அளவுக்கு விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனப் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் "லைட்டான துறைக்கு வெயிட்டான அமைச்சராக உதயநிதி கிடைத்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு பல்கலைக்கழகம், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வந்த எடப்பாடி பழனிசாமியும், விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்தார். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி போலவே உதயநிதி ஸ்டாலினும் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
உதயநிதி பதில் : இதையடுத்து, மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை ஆற்றிப் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "லைட்டான துறைக்கு வெயிட்டான அமைச்சர் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சொல்லி இருக்கிறார். அவருக்கு என் நன்றி" என சிரித்தபடியே கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "விளையாட்டுத்துறையை விளையாட்டாக பார்க்கும் நிலை முன்பு இருந்தது. பள்ளிகளில் பி.இ.டி பீரியட்களை கணக்கு, அறிவியல் பாட டீச்சர்கள் கடன் வாங்கி சிலபஸை முடித்து விடுவார்கள். அதுபோல, விளையாட்டுத்துறையை மற்ற துறைகள் ஆக்கிரமிக்கும் நிலை முன்பு இருந்தது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, விளையாட்டுத்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு பி.இ.டி ஆசிரியர்கள், மேத்ஸ், ஃபிசிக்ஸ் கிளாஸை எல்லாம் அவர்கள் கடன் வாங்கி அந்த பீரியட்களில் பி.இ.டி விடுவதைப் போல, விளையாட்டுத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்" என்றார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications