பாலியல் புகார்.. மெயிலில் குமுறிய பெண்கள்.. பிரபல இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மதூர் சத்யா நீக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். காவல்துறை உயரதிகாரிகளே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல இளம் நிர்வாகி மதூர் சத்யா மீது பல்வேறு பெண்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் கூறினார்கள். அதனடிப்படையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. (Mathur Sathya)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூகவலைதளங்களிலும் தன்னுடைய கருத்துகளால் பிரபலமடைந்தவர். ஊடகங்களின் அரசியல் விவாத நிகழ்ச்சிகள், யூடியூப் நேர்காணல்களில் அரசியல் குறித்து பேசுவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு பிரிவுகளில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

மதூர் சத்யா மீது பாலியல் புகார்
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே சிவா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதூர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடந்த மார்ச் 13 ஆம் தேதி மாலை இ மெயில் மூலம் மதூர் சத்யா மீது பாலியல் புகார் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் தொடர்பாக எங்கள் கட்சியின், தென் சென்னை மாவட்ட குழு கடந்த மார்ச் 14 ஆம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
கட்சியில் இருந்து நீக்கம்
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறையில் புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
மதூர் சத்யாவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AIYF, ISCUF தோழர்கள் அனைவரும் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது" என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மதுர் சத்யா பாலியல் புகாரில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் அவர் மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கு விளக்கம்
இதுகுறித்து மதுர் சத்யா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி மூலம் தான் என் மீதான குற்றச்சாட்டுகளை தெரிந்து கொண்டேன். என் தரப்பு கருத்துகளை சொல்ல வாய்ப்பு வழங்கவில்லை. என் வாழ்க்கையில் யாரிடமும் அநாகரீகமாக நடந்த கொண்டதில்லை. அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு தான் உறவை தொடர்ந்துள்ளேன்.
நான் மௌனமாக இருப்பதால் என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகிவிடாது. இந்த நிலையில் நான் அப்பாவி என்று நீங்கள் நம்புவது கடினமாக இருக்கும். இனி நான் என்ன சொன்னாலும் அது எனக்கு உதவ போவதில்லை. என்னை நம்பிய கட்சிக்கும், தோழர்களுக்கும் சட்டரீதியாக நிரூபிப்பேன்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications