மே 14ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் -தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்! திமுக தலைமைக்கழகம் அறிவிப்பு!
சென்னை: மே 14ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் -தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை பார்வையிட தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது திமுக தலைமை.
கும்மிடிப்பூண்டி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதி வரை அனைத்து தொகுதிகளுக்கும் தனி தனி பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து வாரம் ஒரு முறை அது குறித்த விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தொகுதி பார்வையாளர்கள் ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்பது அவர்களுக்கு துரைமுருகன் கொடுத்துள்ள அறிவுறுத்தலாகும்.
ஆனால் பெரும்பாலான பார்வையாளர்கள் அது போல் முறையாக ரிப்போர்ட் அனுப்புவதில்லை என்ற தகவல் ஸ்டாலினை எட்டியிருக்கிறது.
இதனிடையே இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், "மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்", 14-05-2023 (ஞாயிற்றுக்கிழமை), காலை 11.00 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.''
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications