அதெப்படி நாம் தமிழர் மீது NIA விசாரணை நடத்தலாம்? சப்போர்ட்டுக்கு வரும் மே17 திருமுருகன் காந்தி!
சென்னை: சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனைகள், விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA- என்.ஐ.ஏ) நடவடிக்கைக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் நிதி உதவி பெற்றது, தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியினர் மீதான இந்த விசாரணைக்கு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தார். என்.ஐ.ஏ. விசாரணை நடத்துவதாக இருந்தால் என்னைதானே முதலில் விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
நாம் தமிழர் கட்சிக்கு தற்போது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ளாதாவது: நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மீது என்.ஐ.ஏ விசாரணை என்பது கண்டனத்திற்குரியது. மாநில கட்சிகளின் மீதான நெருக்கடிகளை பாஜக அதிகரித்துக்கொண்ட வண்ணம் இருக்கிறது. அமலாக்கத்துறை, தேசியபுலனாய்வு முகமை எனும் நிறுவனங்கள் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் கைப்பாவையாக இயங்குகின்றன. இந்த அமைப்புகளின் நோக்கம் ஊழலை ஒழிப்பதோ, தேசத்தை பாதுகாப்பதோ அல்ல, மாறாக பாஜகவின் நலனுக்காக செயல்படுவதாகவே அமைவதாக இந்தியாவின் பல முன்னனி தலைவர்களே அம்பலப்படுத்தியிருக்கின்றனர். மாநிலங்களின் கட்சிகள் முடங்கும் வண்ணம் செயல்படும் போக்கானது கண்டனத்திற்குரியது.
மாநில கட்சிகளிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் அணுகுமுறைகள் மாறுபட்டு இருந்தாலும் பாஜக எனும் பெரும் ஆபத்தை அனைவரும் எதிர்கொண்டே இருக்கிறார்கள் என்பதை இக்கட்சிகள் உணரவேண்டும். தமக்குள்ளாக பிரிந்து எதிரிக்கு வழிவிடும் போக்கை ஆங்கிலேயர் காலம் முதல் இன்றுவரை தொடர்வது துயரமானது. நமக்குள்ளாக இருக்கும் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் உரிமை காக்க ஒற்றுமையுணர்வுடன் பாஜக தமிழ்நாட்டில் காலூன்றச்செய்யாமல் இயங்க வேண்டுமென்பதை இந்நிகழ்வு மேலும் உறுதி செய்கிறது. மாநில காவல்துறையின் அதிகாரத்தை மீறி செயல்படும் என்.ஐ.ஏ போன்ற அமைப்புகள் மாநில உரிமையை சிதைக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டு நாம் தமிழர் மீதான விசாரணையை அனைவரும் கண்டிக்க முன்வரவேண்டும். இவ்வாறு திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications