பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா.. சென்னையில் வந்தாச்சு சூப்பர் வசதி.. அதிகாரி தகவல்
சென்னை: பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முகவர்களை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். ரகசியத் தகவல் ஆவணங்களை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்க மே ஐ ஹெல்ப் யூ' வசதி இருக்கிறது என்றார்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடிந்தவரை நீங்களே முயற்சி செய்யுங்கள். முகவர்களை நாடும் போதும், உங்களுடைய ரகசிய ஆவணங்கள் சிலரால் தவறுதலாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க தெரியாது என்றால் கவலைப்பட வேண்டாம். அதற்காகவே மே ஐ ஹெல்ப் யூ' வசதி பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் தொலைப்பேசியில் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ் கோவேந்தன் இதுபற்றி கூறுகையில், 'பாஸ்போர்ட் சேவைகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக 'நான் உங்களுக்கு உதவலாமா' ( மே ஐ ஹெல்ப் யூ' ) என்ற சிறப்பு பிரிவு சென்னை அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த சேவை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை சேவைகள் கிடைக்கும். இதற்கான தொலைபேசி எண்கள் 044-2851 3639 மற்றும் 044-2851 3640 ஆகிய எண்களில் தாராளமாக அழைக்கலாம்.
சந்தேகங்களை 91-73053-30666 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவும் அனுப்பி நிவாரணம் பெறலாம். இதேபோல் ஆன்லைனில் மட்டுமின்றி, பொதுமக்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பாஸ்போர்ட் குறித்த சேவைகள் குறித்த வழிகாட்டுதலைப் பெறலாம்.
அதேபோல் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிரப்புவதில் ஏற்படும் சந்தேகங்களை நீங்கள் தெளிவுப்படுத்தி கொள்ளலாம். பாஸ்போர்ட் விண்ணப்பித்த பிறகு அலுவலர்கள் சந்திப்பு திட்டமிடல் ஆவணத்தையும் பெற முடியும். பாஸ்போர்ட் செயல்முறை எளிமையானது மற்றும் விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே அதை நீங்களே முடிக்க முடியும்.
அதேபோல், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஒரே ஒரு அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.passportindia.gov.in ஆகும். அத்துடன் 'mPassport Seva' என்ற அதிகாரப்பூர்வ செல்போன் ஆப் மூலமாகவும் செய்ய முடியும். பொதுமக்களின் அடிப்படை கேள்விகள் மற்றும் சந்தேகங்களை இதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியும்.
'mPassport Seva' என்ற ஆப் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு உதவுகிறோம். இந்த ஆப் முகவர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்காமல் இருக்க நிச்சயம் உதவும். எனவே பொதுமக்கள் பாஸ்போர்ட்டுகளை நேரடியாகவே விண்ணப்பிக்கலாம். முகவர்களை தவிர்த்து அவர்களுடன் எந்த தகவல்களும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அவர்கள் ரகசியத் தகவல் அல்லது தனிப்பட்ட ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது" இவ்வாறு கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications