மே வந்தாச்சு.. தமிழக அரசு தரப்போகும் ரூ.3000 "பேமெண்ட்".. எந்தெந்த திட்டங்களில் தெரியுமா?
சென்னை: பல்வேறு நலத்திட்டங்களுக்கான மே மாத தொகை தமிழ்நாடு அரசு மூலம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது நாளை முதல் அடுத்த சில நாட்களில் மே மாதத்திற்கான மாத தொகை ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மகளிர் உரிமை தொகை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் இந்த தொகை அதிக கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் முழுக்க பின்வரும் 3 முக்கிய திட்டங்கள் மூலம் மாதம் ரூ.3000 உங்க வங்கி கணக்கில் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் 2 வாரங்களுக்குள் இந்த தொகை ரிலீஸ் செய்யப்படும். இந்த மாதத்திற்கான தொகை அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
முதல் திட்டம்
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே விரிவு செய்யப்பட்டு விட்டது. அதன்படி பின்வரும் மக்களுக்கு இந்த திட்டம் விரிவு செய்யப்பட்டு விட்டது.
1. முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.

2, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
3. புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
4. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மொத்தம் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு இந்த மாதம் 15ம் தேதி பணம் வழங்கப்படும் மொத்தமாக 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் திட்டம்
மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அமலில் உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அமலில் உள்ளது.. இதன் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.
மூன்றாம் திட்டம்
அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி மேலும் ரூபாய் 2000 மொத்தமாக வரும். புதுமை பெண் திட்டம் புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை மூலம் இந்த பணம் வழங்கப்படும்.
புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதற்கான இரண்டாம் தவணை இந்த வாரம் வழங்கப்படும். கடந்த வருடம் தமிழ்நாடு பட்ஜெட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்' மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
யாருக்கு வழங்கப்படுகிறது?: அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாதான் கடந்த வருடம் நடந்து 1 வருடமாக பணம் கொடுக்கப்படுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications