Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டிக்கிட்டீங்களே “மாயாஸ் அம்மா”.. 8 வயது மகளுடன் ஆபாச படம் பார்த்தவருக்கு பாராட்டு! ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பெண் யூடியூபரான மாயாஸ் அம்மாவின் குழந்தை வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்ட பெற்றோர் ஒருவர் தன்னுடைய 8 வயது மகளுடன் ஆபாச படம் பார்த்ததாக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாயாஸ் அம்மா என்ற பெயரில் யூடியூபில் குழந்தை வளர்ப்பு, மனநலம் தொடர்பான வீடியோக்களை ஒரு பெண் வெளியிட்டு வருகிறார். இது அல்லாமல் பெற்றோருக்கு குழந்தை வளர்ச்சி பயிற்சிகளை அளித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது குழந்தையுடன் வெளியிட்ட ஒரு வீடியோவுக்கு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

 Mayas Amma appreciates parent who watch adult film with 8 year old girl

அதில் அவர் பேசியதாவது, "மல்லிகைப்பூ வாங்க வெளியில் சென்றோம். அங்கு வயதான ஒரு மூதாட்டியிடம் பூ வாங்கிவிட்டு பர்சில் பணம் எடுத்து கொடுக்கும் நேரத்தில் எனது மகளின் கன்னத்தை அவர் கிள்ளிவிட்டார். பணம் எடுத்து கொடுக்கும்போது நான் அதை பார்க்கவில்லை.

அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவுடன் இதுபற்றி நாங்கள் பேசினோம். முந்தைய தலைமுறையினர் உடல் எல்லைகளை புரிந்துகொள்ளாமல் உள்ளனர். வேண்டுமென்றே அவர்கள் துன்புறுத்தவில்லை. நமது உடம்பு நம்முடையது. அவரை தள்ளிப்போக சொல்ல நமக்கு எல்லா உரிமையும் உள்ளது.

ஆனால், எங்களால் அந்த நேரத்தில் எதுவுமே சொல்ல முடியவில்லை." என்றார். அவருடன் இருந்த அவரது பெண் குழந்தை, "ஏன் பெரியவர்கள் இதுபோல் நடந்துகொள்கிறார்கள்? அம்மா" என்று கேட்க எனக்கு தெரியாது என்று அவர் பதிலளித்தார். "குழந்தைகள் சிறிதாக, அழகாக இருப்பதால் இவ்வாறு செய்திருக்கலாம்." என்று அந்த குழந்தை சொல்ல, அந்த அம்மாவும், "குழந்தைகள் வெளியில் சொல்ல மாட்டார்கள், மறுக்க மாட்டார்கள் என்பதால் செய்யலாம்.

உடல் வரம்புகள் தொடர்பாக தொடர்ந்து பேசுவோம். இது தொடர்பாக ஒரு வொர்க்‌ஷாப் நடத்துகிறேன். கீழே விபரம் உள்ளது." என்று தெரிவித்து இருக்கிறார். இவரது இந்த வீடியோவை பலரும் விமர்சித்து இருந்தனர். உடல் வரம்பு என்ற பெயரில் தீண்டாமையை ஊக்குவிப்பதாகவும், வொர்க்‌ஷாப் நடத்துவதற்காக இவ்வாறு பொய் சொல்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் மற்றுமொரு யூடியூப் நேர்காணலில், பழங்காலத்தில் குறிப்பிட்ட சமுதாய பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று இருந்த கொடும் சட்டத்தை ஆதரித்து பேசி வெள்ளையர்கள், அதை அணிய வைத்ததாக கண்டித்து இருந்தார். இதுவும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார்.

இவர் நடத்திய குழந்தை வளர்ச்சி பயிற்சியில் கலந்துகொண்ட பெற்றோர் தனக்கு அனுப்பிய மெசேஜ்ஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஸ்டோரியாக மாயாஸ் அம்மா பதிவிட்டு உள்ளார். அதில் ஒரு ஸ்டோரியில் ஒரு பெற்றோர் தனது 8 வயது மகளுடன் அமர்ந்து ஆபாச படம் பார்த்து விளக்கம் அளித்ததாக மாயாஸ் அம்மாவுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆபாச படத்தை 8 வயது பெண் குழந்தையிடம் காட்டியது சட்டவிரோதம். இதனை கண்டிக்காமல் பிரில்லியண்ட் என்று அந்த பெற்றோரை பாராட்டி இருக்கிறார் மாயாஸ் அம்மா. இதற்கு முன் பப்ஜி மதன், பரிதாபங்கள் கோபி சுதாகர் பற்றி வீடியோ வெளியிட்ட ஜேசன் சாமுவேல் இது பற்றி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+