சென்னையில் பெண்களுக்கு ஸ்பெஷல் ஜிம்.. ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.. மேயர் பிரியா அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் பெண்களுக்கு என பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். ரிப்பன் மாளிகையில் பட்ஜெட் தாக்கல் செய்த பிரியா, பெண்கள் உடற்பயிற்சிக்கூடம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்கான 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அப்போது 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

2024-2025 ஆம் கல்வியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் கல்வித்துறையின் கீழ் உள்ள 208 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப்பள்ளிகள் 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் தலா 2 செட் வீதம் 1,20,175 மாணவர்களுக்கு சீருடை துணிகள் ரூ. 8.50 கோடி மதிப்பீட்டில் வாங்கி வழங்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையம் ரூ.3.00 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
சென்னைப் பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு (Imprest Amount) நிதி வழங்கப்படும்
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் திறமை மிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நேரடியாகவும் மற்றும் இணையதள வாயிலாகவும் SCIENCE TECHONOLOGY ENGINEERING MATHEMATICS (STEM) ACADEMY OF EXCELENCE என்ற பயிற்சி பள்ளியில் சேர்த்து பயிற்சி வழங்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையிலுள்ள 208 தொடக்க மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தமுள்ள 338 பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு 5% வீதம் பச்சை வண்ணப்பலகைகள் வழங்கப்படும். சென்னையில் 19 விளையாட்டு திடல்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.
சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய மாணவர் படை(NCC) மற்றும் சாரண, சாரணியர் இயக்கத்தில் கலந்துக்கொண்டு பங்காற்றி வரும் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கப்படும். அனைத்து சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கும், அடையாள அட்டை (ID Card) வழங்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் இரண்டு சமுதாயக் கல்லூரிகளில் ரூ.50.00 லட்சம் செலவில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை மழலையர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் புத்தகங்கள் அச்சிடப்படும். சென்னை பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் வளர் இளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35.00 செலவில் 10 ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவர்.
உடற்கல்வி மேம்படுத்துவதற்காக விளையாட்டு கருவிகள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மண்டல, மாவட்ட, மாநில, தேசிய அளவிளான போட்டிகளில் பங்குபெறச் செய்யப்படும்.
சென்னையில் உள்ள 200 மாநகராட்சிகளிலும் பெண்களுக்கு என பிரத்யேக உடற்பயிற்சிக்கூடம் ஏற்படுத்தப்படும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் அறிவித்தார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications