நான் இருக்கேன்! ஆக்ரோஷமாக பொங்கிய மக்கள்.. சட்டென ரோட்டில் இறங்கி! வியக்க வைத்த மேயர் ப்ரியா
சென்னை: சென்னையில் கடும் ஆக்ரோஷத்தோடு கோரிக்கைகளை வைத்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை சென்னை மேயர் ப்ரியா ராஜா கேட்டறிந்தார்.
சென்னையில் மின் தடை காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் பல இடங்களில் மின்சாரம் இன்னும் வரவில்லை என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதிக்கு ஏன் மின்சாரம் வரவில்லை.. ஏன் இன்னும் மின் தடை நிலவுகிறது என்று கோரிக்கை வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.

இரண்டு நாட்களாக மக்கள் இந்த கோரிக்கையை வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. சாலையில் இருக்கும் மின்சார பாக்ஸ்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் மின்சாரம் ட்ரிப் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
ட்ரிப்: இப்படி மின்சாரம் ஆவதை தடுக்கும் விதமாக பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் 30 - 40 மணி நேரமாக இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் துடி துடித்து வருகின்றனர். இதன் காரணமாக பலருக்கு வீடுகளில் தண்ணீர் வசதி கூட இல்லை. மின்சாரம் இல்லாமல் டேங்கில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் வெள்ளம் இருப்பதால் உடனுக்குடன் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சாலையாக தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வயர்கள் சாலைக்கு கீழே உள்ளன. அண்டர்கிரவுண்ட் வயர்கள் சேதம் அடைந்துள்ளதா.. சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .
தீவிர சோதனைக்கு பின் மின்சாரம்: இதை பார்க்காமல்.. அப்படியே மின்சாரம் தர முடியாது. இதற்கு முதலில் தண்ணீர் வடிய வேண்டும். இதற்காக தெரு தெருவாக சோதனை செய்து படிப்படியாக மட்டுமே மின்சார வழங்கப்பட்டது. பொதுவாக இது போன்ற நேரங்களில் எல்லா தெருக்களையும்.. சிறு சிறு தெருக்களாக இருந்தாலும் சரி.. சோதனை செய்யாமல் மின்சாரம் வழங்கினால் பூமியில் இருந்து மின்சார பூதமே கிளம்பி இருக்கும். அதாவது கீழே உள்ள வயர்கள் தண்ணீரில் பட்டு பல இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருக்கும்.
இதை தடுக்கவே மின்சாரம் வழங்குவதில் நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சென்னையில் இன்னும் 10 சதவிகித இடங்களுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மின்சாரம் இல்லாத இடங்களில் மோட்டார் இயங்காது என்பதால் தண்ணீர் வசதியும் பாதிக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் இல்லை; இந்த நிலையில்தான் மின்சாரம், தண்ணீர் வசதி கேட்டு சென்னையில் பலர் போராடி வருகின்றனர். சென்னையில் கடும் ஆக்ரோஷத்தோடு கோரிக்கைகளை வைத்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை சென்னை மேயர் ப்ரியா ராஜா கேட்டறிந்தார்.
சென்னை திருவிக நகரில் இயல்பு நிலை திரும்பவில்லை என்று கூறி மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். அங்கே வாகனங்களை செல்ல விடாமல் போராட்டம் செய்தனர். அப்போது விஷயம் கேள்விப்பட்டு மேயர் பிரியா உடனே அங்கு சென்றார். அப்போது வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தால் மேயர் பிரியா அப்படியே சாலையில் இறங்கி மக்களிடம் பேசினார் .
மக்கள் கூட்டத்திற்குள் நேரடியாக சென்று.. நான் இருக்கேன்.. கவலை வேண்டாம்.. இன்று உங்களுக்கு மின்சாரம் வரும். உங்கள் தெருவில் தண்ணீர் உள்ளது. மின்சார பாக் உள்ள இடத்தில் தண்ணீர் உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் எப்படி மின்சாரம் கொடுக்க முடியும். நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்படும். கொஞ்ச நேரத்தில் மின்சாரம் வரும், என்று உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications