துப்பாக்கி குண்டுகளுடன் விமானம் ஏற முயன்ற மயூரா ஜெயக்குமார்.. பையை மாற்றி எடுத்துவந்ததாக விளக்கம்..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் துப்பாக்கி குண்டுகளை விமான நிலையத்திற்கு எடுத்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் மயூரா ஜெயக்குமார். இவர் மயூரா ரேடியோ மார்ட் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வருகிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக இருக்கும் இவருக்கு தென் மாவட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் எப்போதும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென் கோடி முனைகளில் கட்சிப் பணிகள் காரணமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் மயூரா ஜெயக்குமார்.
அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது பைக்குள் 17 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவைகள் அனைத்தும் 7.5 Mm பிஸ்டன் ரக துப்பாக்கி குண்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமானம் ஏற அனுமதி மறுத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மயூராவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தன்னிடம் உள்ள துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்கு முறைப்படி அனுமதி பெற்றிருப்பதாகவும், உரிமம் கூட வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் மயூரா ஜெயக்குமார். துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த பையை மாற்றி எடுத்து வந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications