துரை வைகோ விலகல் அறிவிப்பை டிவியில் பார்த்து அப்படியே 'ஷாக்'ஆகிட்டேன்.. சொல்வது 'அப்பா' வைகோ!
சென்னை: மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக மகன் துரை வைகோ அறிவித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்துதான் தாம் தெரிந்து கொண்டதாகவும் துரை வைகோவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும் மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோவின் வலது கரம், மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது துரை வைகோவின் எண்ணம். இதற்காக மல்லை சத்யாவின் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை பறிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தார் துரை வைகோ.

ஆனாலும் மல்லை சத்யா தமது வலது கரம், உயிரைக் காப்பாற்றியவர்; அவரை விட்டுத்தர முடியாது என்பது வைகோவின் நிலைப்பாடு. இன்னொரு பக்கம், துரை வைகோ, முழுமையாக மதிமுகவை ஜாதிய கட்சியாகவே மாற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறும் என வைகோ அறிவித்திருந்தார். அதேநேரத்தில் மல்லை சத்யாவை மதிமுகவின் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ ஆதரவாளர்கள், பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் துரை வைகோ, கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவார் என தகவல்களும் வெளியாகின. சமூக வலைதளங்களில் மதிமுகவினரும் இதனை பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் துரை வைகோ, இன்று மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் மல்லை சத்யாவின் பெயரை குறிப்பிடாமல் ஒருவர் கட்சியை சிதைத்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார் துரை வைகோ.
துரை வைகோவின் இந்த முடிவு தொடர்பாக வைகோவிடம் ஊடகங்கள் கருத்து கேட்ட போது, மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்தது எனக்கு தெரியாது; டிவியில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார். மேலும் துரை வைகோவின் இந்த முடிவு தமக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்றும் வைகோ எம்பி தெரிவித்துள்ளார். மகன் துரை வைகோவின் முடிவு தந்தை வைகோவுக்கு தெரியாது என்பது மதிமுகவினரை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications