மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஸ்பத்திரியில் அனுமதி.. சென்னை அப்பல்லோவில் அட்மிட்!
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைகோ அட்மிட் ஆகியுள்ளார். வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டுள்ள பிளேட்டை அகற்றுவதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் வைகோவிற்கு வலது கை தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தோள்பட்டையில் வைக்கப்பட்டுள்ள பிளேட்டை அகற்ற வைகோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெல்லையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் இருந்த போது கால் இடறி கீழே விழுந்தார். இதில் வைகோவின் தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து வைகோவிற்கு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வைகோ, பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியிருந்தார். வைகோவின் இடது தோளில் 3 இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன என்றும் அதை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்தால் தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்று வைகோவின் மகன் துரைவைகோ கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications