ப்பா... என்ன பிளான்... 6 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு செம டஃப் கொடுக்க ரெடியாகும் மதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுகவும், அதிமுகவும் மதுராந்தகம்(தனி), .சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர்(தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கின்றன.

மதுராந்தகத்தில்(தனி) மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மரகதம் குமாரவேல் களம் இறங்குகிறார்.

மதிமுக-அதிமுக மோதும் இடங்களில் எல்லாம் டப் பைட் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

கட்சிகளின் தேர்தல் பணி

கட்சிகளின் தேர்தல் பணி

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக விரைவாக தேர்தல் பணியை செய்து வருகின்றன. அதிமுக கூட்டணி கட்சியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பட்டியலும் வெளியாகி விட்டது. இன்னும் பாஜக மட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியிட வேண்டியதுள்ளது. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. அந்த கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன.

திமுக வேட்பாளர் பட்டியல்

திமுக வேட்பாளர் பட்டியல்

திமுக 173 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு மதுராந்தகம்(தனி), .சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர்(தனி), அரியலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 6 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான அதிமுக களம் காண்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

மதிமுக-அதிமுக நேரடி போட்டி

மதிமுக-அதிமுக நேரடி போட்டி

மதுராந்தகத்தில்(தனி) மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மரகதம் குமாரவேல் களம் இறங்குகிறார். வாசுதேவநல்லூர்(தனி) தொகுதியில் மதிமுகவின் சதன் திருமலைகுமார் களம் காண, அதிமுகவில் மனோகரன் போட்டியிடுகிறார். அரியலூரில் மதிமுக மாவட்ட செயலாளர் சின்னப்பா போட்டியிட, அவருக்கு எதிராக அதிமுகவில் தாமரை ராஜேந்திரன் களத்தில் குதித்துள்ளார்.

மதுரையில் டஃப் கொடுக்கும் வேட்பாளர்

மதுரையில் டஃப் கொடுக்கும் வேட்பாளர்

சாத்தூர் தொகுதியில் மதிமுகவில் டாக்டர் ரகுராம் போட்டியிட, அவரை எதிர்த்து அதிமுகவின் ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பூதூர் பூமிநாதன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் எஸ்.எஸ். சரவணன் களம் இறங்குகிறார். பல்லடம் தொகுதியில் மதிமுகவின் முத்து ரத்தினம் களமிறங்க, அவரை எதிர்த்து அதிமுகவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். மதிமுக-அதிமுக மோதும் இடங்களில் எல்லாம் டஃப் பைட் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வைகோ அதிரடி உத்தரவு

வைகோ அதிரடி உத்தரவு

இந்த இரண்டு கட்சிகளும் நேரடியாக மோத உள்ள தொகுதிகளில் மதிமுக அடிமட்ட அளவில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. தொகுதியில் உள்ள முலை, முடுக்கெல்லாம் மதிமுகவினர் வீடு, வீடாக அதிமுகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 6 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு வைகோ உத்தரவிட்டுள்ளார். இதற்காக தனியே திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+