கொரோனா முன்கள பணியாளர்களுக்கு சிறந்த மருத்துவ விருது...உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு கவுரவிப்பு
சென்னை : கடந்த நான்கு ஆண்டுகளாக உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மருத்துவப் பிரிவு மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

உலகெங்கும் உள்ள தமிழ் மருத்துவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், மருத்துவத்துறையில் சிறந்து விளங்கவும், தமிழ்நாட்டில் உள்ள மூத்த மருத்துவர்கள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், தங்களுடைய அனுபவங்களை உலகத்தில் உள்ள தமிழ் மருத்துவர்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது இவ்வமைப்பு.
இவ்வாண்டு கொரோனா இரண்டாம் அலையின் போது புதியதாக அமையப் பெற்ற தமிழக அரசு, முதல்வர் மு. க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படியும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், 104 சேவை மையங்கள், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், செய்தியாளர்கள், போன்றவர்களுக்கு மெடிக்கல் எக்சல்லென்ஸ் அவார்ட்ஸ் ( MEDICAL EXCELLENCE AWARDS) வழங்கி கௌரவிக்கபட உள்ளனர்.
இவ்விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு முதன்மை செயலாளர், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அழைத்து ஜூலை 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னையில் விருது வழங்கப்பட உள்ளது.
அயல்நாட்டு தமிழ் மருத்துவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தங்களின் பங்களிப்பாக நோய் தொற்றிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதையும் அயல்நாட்டில் தாங்கள் எதிர்கொண்ட மருத்துவ சவால்களையும் கட்டுரையாக வழங்கவுள்ளனர் என உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவரும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications