‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் பெயரை 'துணிப்பை' என மாற்றிய தவெக அரசு.. 105 இடங்களில் இயந்திரங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தின் பெயர் தற்போது 'துணிப்பை திட்டம்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு, 2019ல் அப்போது ஆட்சியில் இருந்த, அதிமுக, அரசு தடை விதித்தது. இதையடுத்து, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 2021 டிசம்பர் மாதம், அப்போதைய திமுக அரசு, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தை தொடங்கியது.

Meendum Manjappai Scheme Renamed Thunippai Scheme in Tamil Nadu

அன்றாடக் கொள்முதல்களுக்கு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை எளிதாகப் பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் வழங்குவதே இதன் நோக்கம்.

மக்கள் கூடும் இடங்களில், 10 ரூபாய் செலுத்தி மஞ்சப்பை பெறுவதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தற்போது இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கும் பணிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

தற்போது இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் மஞ்சப்பை என்ற பெயர் நீக்கப்பட்டு, 'துணிப்பை வழங்கும் திட்டம்' என்ற பெயரில், அந்த திட்டத்தை தொடர அரசு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், துணிப்பை வழங்க, இயந்திரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 105 இடங்களில் இயந்திரங்கள் வைப்பதற்கும், அதில் வைப்பதற்கு தேவையான துணிப்பை வழங்க, டெண்டர் கோரும் பணிகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி உள்ளது.

தவெக ஆட்சியில், முந்தைய ஆட்சியில் திமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றி வருகிறது. அந்தவகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துணிப்பை திட்டம் என தவெக அரசு மாற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+