பீரியட்ஸ் பெயின் முதல் மூட்டு வலி வரை! மெஃப்டால் 500 மாத்திரையை பயன்படுத்தாதீங்க! எச்சரிக்கை!
சென்னை: மெஃப்தால் மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் என மருந்தியல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மெஃப்தால் 500 என்பது வலி நிவாரணி ஆகும். இது மாதவிடாய் வலி, தலைவலி, தசை பிடிப்பு, மூட்டு வலி, பல் வலி உள்ளிட்ட வலிகளை போக்குவதற்காக போடப்படுகிறது. இந்த மருந்து மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே மருந்து கடைகளில் வாங்கலாம்.

மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் வலி என்றாலே இந்த மெஃப்தால் மாத்திரையைதான் மருந்து கடைகளில் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மருந்தை உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுத்துவதாக இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாத்திரை டைசைக்ளோமைன் மற்றும் மெஃபெனாமிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும். இதன் மூலம் DRESS சிண்ட்ரோம் போன்ற கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தூண்டுகிறது. உடலில் உள்ள உள் உறுப்புகளையும் பாதிக்கிறது. பொதுவாகவே வலி நிவாரணிகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக கிட்னியை பாதிக்கிறது என்கிறார்கள்.
இந்த மெஃப்தால் மருந்தின் எதிர்வினைகள், பாதகங்கள் குறித்து இந்திய பார்மாகோ விஜிலென்ஸ் என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. டிரஸ் சின்ட்ரோம் என்பது உடலில் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்துவது ஆகும். சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், தோல் வெடிப்பு, ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மருந்து எடுத்த இரண்டு முதல் 8 வாரங்களுக்கு பிறகு இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறப்பு விகிதம் 10 சதவீதமாக உள்ளதாம். அதன்படி பெஃப்தால் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மருந்தியல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே மருத்துவர்கள் பரிந்துரையின்றி வலிக்காக இந்த வலி நிவாரணியை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications