மிஸ்ஸாயிருச்சோ.. மேலிட "காதை கடித்த" ரிப்போர்ட்.. சான்ஸும் இல்ல, சாய்ஸும் இல்ல போல.. "ஸ்மார்ட்" திமுக
திமுக எம்பி தேர்தல் வேட்பாளர் விஷயத்தில் திமுக தரப்பு கறார் காட்ட போகிறதாம்
சென்னை: நாளுக்கு நாள் திமுக அரசு தன் மீதான கவனத்தை குவித்து வருகிறது.. அந்தவகையில், ஒவ்வொரு செயல்பாட்டையும் மிக கவனத்துடனும், ஜாக்கிரதையுடனும், நுட்பமாக அணுகி வருவதாக சொல்லப்படுகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. தேசிய கட்சிகள் இதற்கு தயாராகி வரும் நிலையில், திமுகவும் அதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறது.. மற்றொருபுறம், பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பதிலும் ஸ்டாலின் ஆர்வம் காட்டி வருகிறார்..
எப்போதுமே தேர்தல் சமயங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் சபரீசன் மேற்கொண்ட முயற்சிகளும், அதுகுறித்த களஆய்வும், மேலிடத்துக்கு பேருதவியாக இருந்து வருவதை மறுக்க முடியாது.

சபரீசன்
கடந்த சட்டசபை தேர்தலின்போது, திமுகவுக்காக பணியாற்றிய ஐபேக் டீம், ஒவ்வொரு மாவட்ட செயலாளர் பற்றியும், ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டை ஆய்வு செய்து தந்திருந்தது.. இந்த ரிப்போர்ட்டின்படி, திமுகவின் வெற்றிக்காக அரும்பாடுபட்டவர்கள் யார்? அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை சபரீசன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்... கடந்த 4 மாதங்களுக்கு முன்புகூட ஒரு செய்தி கசிந்தது.. அதாவது, திமுகவின் ஆட்சியில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய மா.செ.க்கள் யார் என்று ஆராய்ந்து, அது பற்றின ஒரு லிஸ்ட்டை திமுக மேலிடம் தயார் செய்ததாம்.

பச்சை கலர்
பச்சை, ஆரஞ்சு, சிகப்பு என்ற ரீதியில் மா.செ.க்கள் அந்த லிஸ்ட்டில் வரிசைப்படுத்தப்பட்டு, அதனடிப்படையில் மா.செ.க்கள் நியமனம் இருக்கும் என்று கூறப்பட்டது.. அதுமட்டுமல்ல, 70 வயதுக்கு மேற்பட்ட மா.செ.க்களை மாற்றியமைத்து அந்த மாவட்டங்களில் இளைஞர்களை மா.செ.வாக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம், உதயநிதி ஏற்கனவே ஒரு கோரிக்கையை வைத்திருந்தாராம்.. அதுபோல, "சீனியர் மா.செ.க்கள் பலரும் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.. அமைச்சர் பதவியில் அவர்கள் இருப்பதால் கட்சி பதவியிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்" என்று தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஸ்டாலினிடம் சபரீசனும் யோசனை சொன்னாராம்.

உளவுத்துறை
இதில், சில அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளும் எம்பியாக உள்ளனர்.. சிலர் ஏதாவது வழக்குகளில் புகார் எழுந்தவர்கள்.. சிலர், தொகுதிக்குள் அதிகாரிகளுடன், இணக்கமாக இல்லாமல் முட்டல் மோதல்களை கடைப்பிடிப்பவர்களாம்.. அதுமட்டுமல்ல, சிலர், மத்திய அமைச்சர்களை வைத்து, தங்கள் "காரியத்தை" முடித்து கொண்டு, தொகுதி வளர்ச்சியில் அவ்வளவாக அக்கறை காட்டாதவர்களும் அடக்கமாம். இப்படியான ஒருசில எம்பிக்களால், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியவர்கள் குறித்து, உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை எடுத்துள்ளதாம்.. இவை யாவும் தலைமையின் காதுக்கு எட்டி உள்ளதாக தெரிகிறது..

மிஸ்டர் கிளீன்
அந்தவகையில் கிட்டத்தட்ட 8 முதல் 10 எம்பிக்கள் வரை எம்பி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள்.. அதற்கு பதிலாக, இளைஞர் அணி, மகளிர் அணிக்கு முக்கியத்துவம் தந்து, வேட்பாளர்களை தேர்வு செய்யவும் தலைமை திட்டமிட்டிருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் கவனம் பெற்று வரும் நிலையில், எந்தவிதமான குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத, கிளீன் வேட்பாளர்களுக்கே நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.. இப்படி ஒரு யூகமான தகவல்கள் கசிந்துவந்தாலும், புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மகளிருக்கும் பதவி வாய்ப்புகளை அளிக்கும்போது, அது திமுக அரசுக்கு கூடுதல் நன்மதிப்பையும், மக்களிடம் நம்பிக்கையையும் நிச்சயம் பெற்று தரும் என்கிறார்கள்..!!!
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications