ஒரே ரீசார்ஜ்.. ஏகப்பட்ட பலன்கள்! Jio வாடிக்கையாளர்களுக்கு செம ஆஃபர்.. 912.5 GB டேட்டா.. முழு விவரம்!
சென்னை: சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்பெஷல் சலுகையை அறிவித்துள்ளது. 2999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் முழுவதும் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதோடு ஏராளமான வேல்யூ ஆடட் ஆஃபர்களும் வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ சுதந்திர தின ஆஃபரில் ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்தால் 1 வருட வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் அவுட்கோயிங் கால் வசதி, தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு விமான, ஹோட்டல் கட்டண சலுகைகள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் சலுகைகள், ஸ்விகி ஃபுட் ஆர்டரில் தள்ளுபடி என ஏராளமான ஆஃபர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ சுதந்திர தின ஆஃபர்: ஜியோ யூசர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அவுட்கோயிங் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என வருடம் முழுவதும் 365 நாட்களுக்கும் வழங்கப்படும். மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். அத்துடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சேவைகளையும் இலவசமாக பயன்படுத்தலாம். 5ஜி டேட்டா யூசர்களும் இந்த ஆஃபரை பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ சுதந்திர தின ஆஃபர் 2023 ப்ரீபெய்ட் ஆஃபர், ஜியோ பயனர்களுக்கு கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. அதன்படி, ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஸ்விக்கி ஆர்டர்களுக்கு ரூ.100 தள்ளுபடி பெறலாம். ஏஜியோவில் (AJIO) குறிப்பிட்ட ஆடைகளுக்கு ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ரூ.200 தள்ளுபடி பெறலாம்.
ஏராளமான பலன்கள்: யாத்ரா ஆப் மூலம் முன்பதிவு செய்யும் விமான டிக்கெட்களுக்கு ரூ.1,500 வரை சலுகை வழங்கப்படுகிறது. மேலும், யாத்ரா ஆப் மூலம் உள்நாட்டு ஹோட்டல் முன்பதிவுகளில் பயனர்கள் 15 சதவீத தள்ளுபடி (ரூ. 4,000 வரை) பெற முடியும். நெட்மெட்களில் (NETNEDS)கூடுதல் என்எம்எஸ் சூப்பர் கேஷுடன் ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்தால் 20 சதவீத தள்ளுபடி பெறலாம்.
மேலும், குறிப்பிட்ட ஆடியோ சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
எப்படி ரீசார்ஜ் செய்வது?: உங்களது ஸ்மார்ட் போன் மூலம் மை ஜியோ ஆப்பில் ரீசார்ஜ் செய்யலாம் அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.2,999 பிளானை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். கூகுள் பே போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மூலமாகவும் ஜியோவின் ரூ.2,999 ஆஃபர் பிளானுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளது. அப்போது ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக புதிய ஜியோ 5G திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, தற்போதைய 4ஜி பிளான்களில் மட்டுமே 5ஜி சேவை கிடைத்து வருகிறது.
ஜியோ 5ஜி போன்: இந்த நிகழ்வில் ஜியோ தனது ஏர் ஃபைபர் 5ஜி எனப்படும் 5ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதோடு ஜியோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் உடன் வரும், 4ஜிபி ரேம் உடன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரை, ஜியோ 5ஜி ஃபோனில் 13 MP பிரைமரி சென்சார் மற்றும் 2 MP செகண்டரி சென்சார் அடங்கிய டூயல் கேமரா அமைப்புடன் வர வாய்ப்புள்ளது. இதில் 5MP முன்பக்க கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications