Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் வேளையில், திமுக, அதிமுக கட்சிகள் உச்சக்கட்ட கூட்டணி முடிவுகளில் மூழ்கி வருகின்றன.. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரங்கேறியுள்ள ஒரு முக்கிய நகர்வு அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.. இதை பற்றின ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்திதான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. இந்நிலையில், செட்டில் ஆகிவிட்டது என நினைத்த திமுக கூட்டணியிலும் இன்னும் சலசலப்பு சத்தம் ஓயவில்லை. கம்யூனிஸ்டுகள், விசிக மற்றும் மநீம ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடித்து வருகின்றன. தவாக வேல்முருகன் கூட்டணியையே முறித்துக்கொண்டார்.

Edappadi Palaniswami BJP AIADMK TTV Dhinakaran Anbumani Ramadoss Amit Shah NDA Alliance Tamil Nadu Assembly Election 2026 TN Election Special Delhi Politics Seat Sharing 2026

எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலி

திமுகவில் இந்த கூத்து என்றால் தமிழகத்தில் தேஜ கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலேயே இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக இன்று அதாவது மார்ச் 21 சென்னை வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.. இந்தத் திடீர் மாற்றம் வெறும் தற்செயலானது அல்ல, இதற்குப் பின்னால் ஒரு நுணுக்கமான அரசியல் கணக்கு இருப்பதாகவே டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன..

ஏற்கனவே அமித் ஷாவை சந்தித்து விட்டுத் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, இன்று பியூஸ் கோயல் வந்ததும் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டு நிம்மதியாக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கலாம் எனத் திட்டமிட்டிருந்தாராம்.. ஆனால், அவரது கணக்கை தவிடுபொடியாக்கும் வகையில் பியூஸ் கோயலின் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

பாஜக வெயிட்டிங் கேம்

இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது, அதே நாளில் டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அமித் ஷாவை சந்திக்க டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதுதான்.. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்..

அதேபோல டிடிவி தினகரன் தனது குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதோடு, தமிழகத்தில் கூட்டணிக்கு பாஜகதான் தலைமை என்று பகிரங்கமாகவே பேசத் தொடங்கி விட்டாராம்..

இது அதிமுகவின் "தலைமை" என்ற அந்தஸ்துக்கே நேரடியாக விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, தென் மாவட்டங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை அமித் ஷாவிடம் விளக்கி, அங்குள்ள முக்கியத் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் டிடிவி மும்முரமாக உள்ளாரா..

வடமாவட்டம் அன்புமணி ராமதாஸ்

மற்றொருபக்கம் வட மாவட்டங்களின் வாக்கு வங்கியை முன்வைத்து அன்புமணியும் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்.. இவர்கள் இருவரும் டெல்லி மூலம் தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை உறுதி செய்துவிட்டால், பின்னர் எடப்பாடி பழனிசாமியால் எதற்கு மறுப்புத் தெரிவிக்க முடியாது என்பதுதான் இவர்களது வியூகமாம்.

பாஜகவின் இந்த மறைமுக அழுத்தம் எடப்பாடி பழனிசாமியை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகவே தெரிகிறது.. வேறு வழியில்லாமல் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க ஒப்புக் கொண்ட நிலையில், இப்போது தனது அதிகாரத்தையே டெல்லி கேள்விக்குறியாக்குவதை எடப்பாடி பழனிசாமியோ அல்லது அதிமுகவின் மூத்த நிர்வாகிகளோ ரசிக்கவில்லை..

மாப்பிள்ளை அவர்தான்

நயினார் நாகேந்திரன் போன்றவர்கள், மேடையில் அதிமுகதான் தலைமை என்று சொன்னாலும், நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் "மாப்பிள்ளை அவர் தான், ஆனால் சட்டை என்னுடையது" என்ற வரிகளைதான் நினைவூட்டுவதாக உள்ளதாம்.

மொத்தத்தில், இது அதிமுகவை முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜக நடத்தும் ஒரு உளவியல் போர் என்றே சொல்லலாம்.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய அதிகார போட்டிகள் களப்பணியில் தொய்வை ஏற்படுத்தக்கூடும் என்றே தெரிகிறது. டெல்லியில் நடக்கும் இந்த ரகசிய அசைன்மென்ட்கள் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

- நமது சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+