பிள்ளையை கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் விஜய்? மேகமலை விவகாரத்தில் இரட்டை வேடம்? கோபத்தில் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகமலை விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக்கழக அரசு உறுதி அளித்தது. இந்த நிலையில் மேகமலையில் வசித்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் தேனி மாவட்ட ஆட்சியர். அது மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யவும் கிராம வாரியாக சர்வேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளது மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மக்களுக்காக பேசுவோம் என சொல்லிவிட்டு தற்போது மாவட்ட ஆட்சியரை விட்டு அளவீடு செய்வதா? என கொந்தளிக்கின்றனர் மேகமலை பூர்வகுடிகள்.

தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, மேகமலைஉள்ளிட்ட 98 மலை கிராமங்கள் உள்ளன.

Meghamalai Vijay tn government

இந்த பகுதியில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். ஆடு, மாடு மேய்ப்பது இவர்களின் பிரதான தொழில். அது மட்டும் அல்லாமல் முந்திரி, இலவம்பஞ்சு உள்ளிட்ட ஆண்டுக்கு ஒரு முறை பலன் தரும் விவசாயங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேகமலை விவகாரம்

இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சுமார் 5000 ஹெக்டர் பரப்பளவில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற வேண்டும் எனவும், சட்டவிரோத ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அங்கு வசிக்கும் மக்களை 'ஆக்கிரமிப்பாளர்கள்' எனக் கூறியதோடு அவர்களை வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

ஒருவேளை தமிழக அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் துணை ராணுவத்தை வைத்தாவது அவர்களை அகற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. இதை அடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். பொது மக்களின் போராட்டத்தை எடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தமிழக அரசு

சட்டமன்றத்திலும் இதே பதிலை தமிழக அரசின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூறினார். ஆனால் தவெக அரசு சொல்வது ஒன்று.. செய்வது ஒன்றாக இருக்கிறது.. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல விஜய் அரசின் நடவடிக்கைகள் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றார் அப்பகுதி மக்கள். அதற்கு இரண்டு காரணங்களை சுட்டிக் காட்டுகின்றன.

அரசு ஊழியர்கள்

ஒன்று, வன விவசாயிகளுக்கு குடும்பத்தில் சுமார் 118 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ராணுவம், காவல்துறை, வேளாண்மை, கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதாரத் துறை, தபால் துறை, நியாய விலை கடை, விடுதிக்காப்பாளர், மின்வாரியம், ஊராட்சி பணியாளர்கள் என பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் குடும்பம் வனத்தை விட்டு வெளியேறாவிட்டால் 118 அலுவலர்கள் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த துறைகளின் தலைமை அதிகாரிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சர்வே நடவடிக்கை

அதுமட்டுமல்லாமல் ஊதியம் மற்றும் கௌரவ ஊதியம் பெரும் சத்துணவு ஊழியர்கள் அப்பகுதியில் இருந்தாலும் அவர்களும் வெளியேற வேண்டும் என மாவட்ட சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அடுத்த நாளே மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே செய்யும் பணிகள் தொடங்கி இருக்கிறது.

அரசு பணியாளர்கள்

இதற்காக ஊராட்சி அளவில் சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேனி மாவட்ட ஆட்சியரே பிறப்பித்துள்ளார். மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு கொண்டு உள்ளிட்ட பகுதிகளில் அளவிட வருவாய், காவல், வனத்துறை உள்ளிட்ட துறைகளைக் கொண்ட 13 குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீசுகளுக்கு அரசு பணியாளர்கள் பதில் அளிக்காத நிலையில் வன எல்லைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய இந்த குழுக்கள் அமைகப்பட்டுள்ளன.

விஜய் அரசு

கோடாலியூத்து, உரக்குண்டான் 33 கிராமங்கள் மற்றும் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் அளவீடு செய்ய 40 சர்வேயர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளை கண்காணிக்க பெரியகுளம், உத்தமபாளையம் ஆர்டிஓக்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் இவர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல மக்களுக்காக குரல் கொடுப்போம் என சொல்லிவிட்டு தற்போது மாவட்ட ஆட்சியர் மூலம் விஜய் அரசு இரட்டை வேடம் போடுகிறதா? என கொந்தளிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+