விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது அணை விவகாரம்! முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்! மோடியை சந்திப்பாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் விஜய் இன்று டெல்லி செல்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாது அணை குறித்து விவாதிப்பார் என சொல்லப்படுகிறது.

அது போல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு பங்கேற்றால் டி.கே.சிவக்குமாரை சந்திக்கும் போது காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

joseph Vijay Narendra modi

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகாவில் கடந்த 13 ஆம் தேதி நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது. மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டி.கே.எஸ்ஸின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களும் கர்நாடக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அது போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இன்று டெல்லி செல்லும் விஜய், சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் டி.கே. சிவக்குமாரின் ஆணவம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று டெல்லி செல்லும் முதல்வர் விஜய் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தடுக்கவும், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தவுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வார் என தெரிகிறது. மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எழுதிய "Belonging A journey of Love" என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் இன்று மாலை ஐடிசி மவுரியா நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டெல்லி செல்லும் விஜய், சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்பார் என சொல்லப்படுகிறது.

விஜய், கடந்த மே 27ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து மனு அளித்திருந்தார். தற்போது அவர் 2ஆவது முறையாக டெல்லி செல்கிறார். அங்கு மோடியை சந்திப்பாரா என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.

புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்றால் அது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படும். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரும் பங்கேற்கவுள்ளார். எனவே சிவக்குமாரை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து விஜய் பேசுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+