மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தின் அடுத்த நகர்வு என்ன? முதல்வர் விஜய் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டதில் கர்நாடகா அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.

Mekedatu dam vijay

இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்பபு தெரிவித்து வருகிறது. மேலும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் காவிரி விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அண்மையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும், ஜூன் மாதத்திற்கான தமிழகத்தின் பங்கான 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், குடிநீர் தேவைக்கு போதுமான அளவு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், மழை குறைவு காரணமாக தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும், கர்நாடகா அவற்றை ஏற்க மறுக்கும் நிலை நீடித்து வந்தது. பாசனத்திற்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்துக்கு 15 நாட்கள் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் நான்கரை டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. கன்னட அமைப்புகள் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு தற்போது வரை செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றள்ளனர். கூட்டத்தில், தமிழகத்தின் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பது, காவிரி நீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்துவது, தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+