Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேப்டன் பதவியை.. "தானா விட்டுக் கொடுத்த தானைத் தலைவர் தோனி.." அலறியடித்து வந்த அதிரி புதிரி மீம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி பதவி விலகியதை வைத்து பலர் மீம் போட்டு வருகின்றனர். தோனியை பாராட்டியும், அவரின் பேட்டிங்கை கிண்டல் செய்தும் மீம்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Recommended Video

    IPL 2022: Dhoni Steps Down as CSK Captain, Jadeja to lead | OneIndia Tamil

    சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.

    சரியாக முதல் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியை தோனி ராஜினாமா செய்துள்ளார்.

     சிஎஸ்கே சிங்கம்

    சிஎஸ்கே சிங்கம்

    இந்த முடிவை வைத்து பலர் மீம் போட்டு வருகின்றனர். மற்ற அணிகளில் அணி நிர்வாகம் சொல்வதுதான் சட்டம். ஆனால் சிஎஸ்கே அணியில் தோனி எடுப்பதே இதுவரை முடிவாக இருந்திருக்கிறது. இதை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனே.. தல பார்த்துப்பார்,.. அவருக்கு தெரியும் என்று பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் மற்ற அணிகளில் ஒரு வீரருக்கு அவ்வளவு மதிப்பு இருக்காது. இதைதான் பாராட்டி .. சிஎஸ்கேவில் தோனிதான் சிங்கம் என்று இவர் மீம் போட்டுட்டுள்ளார்.

    சிறந்த பேட்ஸ்மேன்

    சிறந்த பேட்ஸ்மேன்

    சிஎஸ்கே அணியில் கடந்த 3 வருடங்களில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ஜடேஜாதான். பல போட்டிகளை தனது பேட்டிங் மூலம் ஜடேஜா மாற்றி உள்ளார். 2018ல் இருந்தே இவர் சிறப்பான பார்மில் இருக்கிறார். அதிலும் கடந்த இரண்டு சீசன்களை இவர் சிறப்பாக ஆடிய நிலையில்தான், அவன் கத்தி வீசுர வேகத்துல... ஒரு புயலே உருவாகும் சார் என்று இவர் மீம் போட்டுள்ளார்.

    கட்டாயம் இல்லை

    கட்டாயம் இல்லை

    சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது அவரின் தனிப்பட்ட முடிவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேறு சில அணிகளில் கேப்டன்களை அணி நிர்வாகமே நீக்கியது. உதாரணமாக ஹைதராபாத் அணியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். கோலியும் கூட அவரே விலகி இருந்தாலும், அணி நிர்வாகம் அழுத்தம் தந்ததாக கூறப்பட்டது. இதை சுட்டிக்காட்டி இவர் மீம் வெளியிட்டுள்ளார்.

    சகாப்தம்

    சகாப்தம்

    சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் இருந்து தோனி விலகியதை பெரிய சகாப்தம் இன்று முடிந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 4 முறை தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே கோப்பை வென்றதை பலர் சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர். மனுஷன் ஒரு தொடர் விட்டது கிடையாது... கிரிக்கெட்டே அழிஞ்சாலும் தலைவனோட புகழ் அழியாது.. யுகமே ஆனாலும் இப்படி ஒரு தலைவன் இனி வர மாட்டான் என்று பலர் இவரை பாராட்டி மீம் போட்டுள்ளனர்.

    டீம் ஜடேஜா

    டீம் ஜடேஜா


    அதேபோல் ஜடேஜா கேப்டனாக இருக்கும் நிலையில் அவர் தோனியை 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யாமல் ஒதுக்குவாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அண்ணே ஒன்னுத்துக்கும் உதாவத உங்கள டீமவிட்டு தூக்கிட்டனே என்று இவர் விமர்சனம் செய்துள்ளார்.

    பேட்டிங் முக்கியம்

    பேட்டிங் முக்கியம்

    அதேபோல் கேப்டன்சி கைமாறிவிட்டது என்பதால் இனிமேல் தோனிக்கு கேப்டன்சி பிரஷர் இருக்காது. இதனால் அவர் வரும் நாட்களில் இன்னும் தீவிரமாக ஆடுவார். பழைய தீவிரத்தோடு அதிரடியாக இவர் பேட்டிங் செய்வார் என்று பலர் மீம் போட்டுள்ளனர். தோனி கடந்த 3 வருடமாக சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜடேஜா என்ன செய்வார்

    ஜடேஜா என்ன செய்வார்

    சிங்கம் ஒன்று எப்படி தனது குட்டியிடம் காட்டு ராஜா பதவியை கொடுக்குமோ, காட்டை பற்றி கற்றுக்கொடுமோ அது போல தோனி தனது கேப்டன்சியை கொடுத்து இருப்பதாக பலர் பாராட்டி உள்ளனர். இப்போதே கேப்டன்சியை மாற்றியதன் மூலம் ஜடேஜாவிற்கு தோனி ஆலோசனை வழங்க முடியும். கேப்டனாக ஜடேஜாவை தோனி மெருகேற்ற முடியும் என்று பலர் பாராட்டி உள்ளனர்.

     3 வருட பேட்டிங்

    3 வருட பேட்டிங்

    தோனி கடந்த 3 வருடமாக சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஆனாலும் கேப்டன் என்ற காரணத்திற்காக அவர் மீது பெரிதாக கேள்வி எழவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் கேப்டன்சியவும் புடுங்கிட்டு விட்டானுக பேட்டிங்கும் இறங்க மாட்ட அப்பறம் ஏன்டா 12 கோடி கொடுத்தானுக சொல்லிதொலையேன்டா.. என்று ரெய்னா தோனியை பார்த்து கேட்பதாக இவர் மீம் போட்டுள்ளார்.

    தோனியை உட்கார வைப்பாரா?

    தோனியை உட்கார வைப்பாரா?

    தோனி இந்த சீசனில் சரியாக ஆடாத பட்சத்தில் அவரை ஜடேஜா உட்கார வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் தோனி இனி கேப்டன் இல்லை. அவர் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படும். இதை வைத்தும் ஜடேஜா என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+