ஷோபனா எல்லாம் இல்ல! கொஞ்சூண்டு "சொர்ணாக்காதான்" இருக்காங்க வேணுமா? டிரெண்டான திருச்சிற்றம்பலம் MEMES
சென்னை: திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் ஷோபனா கேரக்டர் தொடர்பான மீம்ஸ்கள் பல இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள திருச்சிற்றம்பலம் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தனுஷுக்கு தோழியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவரின் ஷோபனா கதாபாத்திரம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு ஷோபனா மாதிரி பெண் தோழி கிடைக்காதா என்று இப்போதே கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். தங்களுக்கும் அப்படி ஒரு தோழி இருந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

மீம்ஸ்
அதே சமயம் இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம் போட்டும் வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக இணையம் முழுக்க ஷோபனா மீம்ஸ்தான் வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது . சமீபத்தில் பரிதாபங்கள் சேனலின் "சாம்பார் வைக்கலாமா?" மீம் டெம்பிளேட் வைரல் ஆனது. இதை வைத்து தற்போது மீம் போட்டுள்ளனர். உனக்குத்தான் பிரண்ட்ஸே இல்லையே.. இதுல ஷோபனா மாதிரி மாதிரி க்ளோஸ் பிரண்ட் எங்க இருந்து கிடைக்கும் என்று கிண்டலடித்து உள்ளனர்.

பிரியமான தோழி
இந்த மீம் வைரல் ஆனதும் பலரும் பழைய பிரியமான தோழி படத்தை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவி.. மாதவனுக்கு நெருக்கமான தோழியாக வருவார். அவர் வாழ்க்கையில் கஷ்டப்படும் போதெல்லாம் உடன் இருப்பார். ஷோபனா கேரக்டருக்கு முன்பே இவர்களின் பிரண்ட்ஷிப் வைரலானது. இதை வைத்தும் நெட்டிசன்கள் தற்போது மீம் போட்டு வருகிறது.

ஷோபனா
இன்னொரு நெட்டிசன் ஷோபானா பற்றி பேசும் இளைஞர்களை விமர்சனம் செய்துள்ளார். அதில், உன் கூட ஒரு பொண்ணு friendlyஆ closeஆ பேசுது, பழகுதுன்னா அதுக்கு உன் மேல லவ் இருக்குன்னு அர்த்தம் இல்ல. அதோட பிரச்னையை எல்லாம் ஷேர் பண்ற அளவுக்கு உன்ன நம்புதுண்ணு அர்த்தம். கண்ட படத்த பாத்து Close Friendஆ இருக்க பொண்ணு கிட்ட லவ் சொல்லி வீணா அந்த அழகான நட்பை கெடுத்துக்காத. அது போனா வராது, என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

சொர்ணாக்கா
தமிழ் சினிமாவில் ஒரு பெண் கேரக்டர் பிரபலம் அடைந்தால் உடனே ஆண்கள் அதே போல காதலி வேண்டும் என்று கமெண்ட் செய்ய தொடங்கி விடுவார்கள். மயக்கம் என்ன யாமினி, வாரணம் ஆயிரம் மேக்நா, 7ஜி ரெயின்போ காலனி அனிதா என்று சினிமாவில் பிரபலம் ஆகும் பாத்திரங்களை எல்லாம் நெட்டிசன்கள் கனவு கன்னியாக்குவது வழக்கம். அந்த லிஸ்டில் தற்போது ஷோபனாவும் சேர்ந்து உள்ளார். இதை நெட்டிசன் ஒருவர்.. ஷோபனா எல்லாம் இல்லை.. சொர்ணாக்காதான் இருக்காங்க வேணுமா என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.

பழைய பேஷண்ட்
இதற்கு முன் தமிழ் சினிமாவில் இதேபோல் பிரபலம் ஆன கேரக்டர் என்றால் அது யாமினிதான். மயக்கம் என்ன யாமினிதான். இளைஞர்கள் பலரும் யாமினி போல காதலி வேண்டும், தோழி வேண்டும் என்று கமெண்ட் செய்து வந்தனர். இதை இந்த நெட்டிசன் கலாய்த்து மீம் போட்டுள்ளார். பழைய பேஷண்ட் யாமினியை டிஸ்சார்ஜ் செய்யுங்கள். புதிய பேஷண்ட் ஷோபனாவை அட்மிட் பண்ணுங்க என்று இவர் மீம் போட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications