"காசுக்கு மேல கூவுறான்டா" அமமுக எம்எல்ஏவை முறைத்த பிரேமலதா விஜயகாந்த்.. தெறிக்கும் சட்டசபை மீம்ஸ்!
சென்னை: சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் விவாதமாக மாறியுள்ளது. குதிரை பேரம், ஜோசியக்காரருக்கு பதவி, மைனாரிட்டி அரசு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பேசிய சூழலில், இதனை வைத்து சோசியல் மீடியாவில் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். அதனை விரிவாக பார்க்கலாம்.
என் புருசன் குழந்தை மாதிரி படத்தில் லிவிங்ஸ்டனை "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி" என்று ஒருவர் புகழ்வார். அதற்கு லிவிங்ஸ்டன், "கொடுத்த காசுக்கு மேல் கூவுறான்டா கொய்யா" என்று எமோஷனலாக கிண்டல் செய்வார். அதில் வரும் லிவிங்ஸ்டனாக விஜய்யையும், கூவுபவராக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜையும் மாற்றி, "காசுக்கு மேல கூவுறான்டா கொய்யா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னமா ஃபீல் பன்றான்டா ரகம்.

எம் மகன் படத்தில் ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் வடிவேலுவை கண்டுபிடிக்க நாசர் முயற்சிக்கும் போது, பீரோவில் ஒளிந்து கொள்வார் வடிவேலு. அப்போது வடிவேலு, "எங்க அக்கா இந்த ஆளுகிட்ட வாக்கப்பட்டு சீரழியுது.. நான் வாக்கப்படாமலேயே சீரழியுறேன்" என்பார். அதில் வரும் நாசராக பிரேமலதாவையும், வடிவேலுவாக அமமுக காமராஜாகவும் மாற்றி, "குதிரை பேரம்னு பேசப்பட்ட போது முகத்தை மூடி சென்றவரை இங்கு யார் என்று காட்ட வேண்டும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிக்கிக்கிட்டான் சித்தப்பு ரகம்.

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஒருவரை பார்த்து பயப்படுவார். கோபமாக பார்க்கும் அந்த நபர், பேசும் அனைத்தையும் முகத்தை விரைப்பாக வைத்து கொண்டு பார்ப்பார். அதில் வரும் நபராக முதல்வர் விஜய்யை மாற்றி,சிஎம் சாருக்கு எதிராக யாராவது இப்படி பேசினா இதுதான் ரியாக்சன் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு ரகம்.

தூள் படத்தில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பவரை அடித்து சொர்ணாக்கா ஓடவிடுவார். அதில் வரும் சொர்ணாக்காவாக பிரேமலதா விஜயகாந்தையும், தொலைபேசியில் பேசும் நபராக அமமுக எம்எல்ஏ காமராஜையும் மாற்றி மீம் உருவாக்கப்பட்டுள்ளது,. அதில் ஒருவர், "இந்த ஆடர்ல தான் சட்டசபையில் உக்காரணுமா? அமமுக காரன் அண்ணியார் கைல அடி வாங்காம போக மாட்டான் போல" என்று வந்துள்ள இனிதான் ஆட்டமே இருக்கு ரகம்.













Click it and Unblock the Notifications