"இதை எழுதி மனப்பாடம் செய்ய எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா" விஜய் vs உதயநிதி.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் அறிக்கைகள் மூலமாக மோதி கொண்டனர். இதனை வைத்து திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ் வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரி, "நான் சொல்லுவேன்.. நீங்க நம்ப மாட்டீங்க.. கட்டையா குட்டையா கரடி மீசை முளைச்ச மாதிரி மூஞ்சி முழுக்க புள்ளி புள்ளி புள்ளியா இருப்பாங்கயா" என்பார். அதில் வரும் சூரியை தவெக தொண்டராக மாற்றி, "நான் ஒன்னு சொல்லுவேன்.. ஆன நீங்க ஒத்துக்க மாட்டீங்க.. பேசாம எழுதி கொடுக்குறவன திருச்சில நிக்க சொல்லி ஜெயிக்கவச்சு சட்டசபைல கூட கூட்டிட்டு போயி வச்சுக்கலாம்ல" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நியாயமான பேச்சு மொமண்ட்.

முறைமாமன் படத்தில் கவுண்டமணி சக நடிகர் ஒருவரை பார்த்து, "அது சரி.. நீ முதல்ல தேங்காய்யை கீழ வச்சுட்டு பேசு" என்பார். அதில் வரும் சக நடிகரை தவெக ஆதரவாளராக மாற்றி, "திமுக - அதிமுக கூட்டணி பேசிருக்காங்க.. சீ disgusing" என்று சொல்வதாகவும், அதற்கு கவுண்டமணி, "அது சரி.. நீ சிவி சண்முகம் கொடுத்த ஆதரவ கீழ வச்சிட்டு பேசு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயையோ இதை மறந்துட்டேனே ரகம்.

படிக்காதவன் படத்தில் பஞ்ச் டயலாக் பேசும் விவேக்கை பார்த்து தனுஷ், அவர் பேசுறதுக்கும் நீங்க சொன்னதற்கு ஏதாவது சம்மந்தம் இருக்கா என்று கேட்பார். அதற்கு விவேக், "பஞ்ச் நல்லா இருக்கானு மட்டும்தான் பார்க்கணும்.. இதை எழுதி மனப்பாடம் பண்ண எவ்வளவு டைம் ஆச்சு தெரியுமா" என்பார். அதில் வரும் விவேக்காக விஜய்யையும், தனுஷாக திமுகவினரையும் மாற்றி, "இது குதிரை பேர ஆட்சி அல்ல.. குதிரை வேக ஆட்சி" என்று சொல்வதாகவும், அதற்கு திமுக, இப்போ அவர் கேட்ட கேள்விக்கும் நீங்க சொன்ன பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் போதும்டா நீங்களும் உங்க அரசியலும் ரகம்.

போக்கிரி படத்தில் விஜய் என்ட்ரி காட்சியில் ஒருவரை போட்டோ எடுத்து, உன்னை தனியா கவனிச்சுக்கிறேன் என்பார். அதுபோல் நேற்று சட்டசபையில் பதில் அளிக்க முடியாத விஜய், "உன்னை எக்ஸ்ல கவனிச்சுக்கிறேன்" என்று சொல்வதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்க ஏரியாவுக்கு வாடா ரகம்.

ராஜா ராணி படத்தில் சந்தானம் ஒருவரை அடித்துவிட்டு, "சரி சரி.. அழுக கூடாது.. இதனை போய் அம்மாகிட்டலாம் சொல்லக் கூடாது.. சரியா" என்று கலாய்ப்பார். அதில் வரும் சந்தானமாக திமுகவையும், அடி வாங்குபவராக தவெகவையும் மாற்றி, "சரி சரி அழுவாத செல்லம்.. உங்க அண்ணா தான் உதயநிதிய கதற விட்டாரு.. சொல்லு உனக்கு குச்சி ஐஸ் புடிக்குமா இல்ல கோன் ஐஸ் புடிக்குமா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

-
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications