டேய் குமரா... நீ லெப்ட் ஹேண்டா? சிஎஸ்கே மேட்சில் நடந்த சம்பவம்.. வச்சு வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நேற்று சிஎஸ்கே மேட்சில் நடந்த சம்பவங்களை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதில் சில மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் மீதம் உள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே ப்ளே செல்ல முடியும் என்ற நிலையில் சிஎஸ்கே உள்ளது.
இதனால் சிஎஸ்கே அணிக்கு ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு சேர்க்கப்பட்டு இருந்தார். இம்பாக்ட் வீரராக அணிக்குள் துபே இறக்கப்பட்டு உள்ளார். சிஎஸ்கே அணியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, பதிரனா, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & விக்கெட்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த நிலையில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் கொஞ்சம் திணறி வந்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. பவுலிங் செய்ய வசதியாக பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்தது.
பிட்ச்:இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் இன்னும் ஸ்லோ ஆகும். அதோடு ஸ்பின் போடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் முதல் இன்னிங்சில் அதிக ரன்களை எடுத்துவிட்டு, டெல்லி அணியை சேஸ் செய்ய வைக்க தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
ஓப்பனிங் இறங்கிய கெய்க்வாட் 18 பந்தில் 4 பவுண்டரி அடித்தார். 24 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார். 13 பந்தில் கான்வே 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். 12 பந்துகள் பிடித்த மொயின் அலி வெறும் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ரஹானேவும் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் தோனி 9 பந்தில் 20 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 167/8 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சால்ட் 17, மணி பாண்டே 27, ரைலி 35 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் டெல்லி அணி வெறும் 140-8 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது.
மீம்ஸ்:இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததால் கடைசியில் பவுலர்கள் கூட வந்து பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டது. சிஎஸ்கே அணியில் துஷார் தேஷ்பாண்டே கூட இறங்கி பேட்டிங் செய்தார்.

அவர் லெப்ட் ஹேண்ட் பேட்டிங் செய்ததை வைத்து.. டேய் குமரா நீ லெப்ட் ஹேண்டா என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.
அதேபோல் சிஎஸ்கே அணியில் ஜடேஜா, ராயுடு போன்றவர்கள் அவுட் ஆனால் உடனே தோனி தோனி என்று ரசிகர்கள் கத்துவது வழக்கம் ஆகி உள்ளது. இதை வைத்தும் நெட்டிசன்கள் மீண்டும் போட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே அணி தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இதை வைத்தும் நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications