எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலையாளி அல்ல.. அவர் நிரபராதி.. விடுவித்தது போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேட்டில் மனநலம் பாதித்தவர் மரணமடைந்த வழக்கில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டு, நிரபராதி என்று தெரிய வந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

நேற்று மதியம் 12 மணியளவில் கோயம்பேடு எலுமிச்சை பழம் வணிக வளாகத்தில் இரு நபர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் கீழே தள்ளிவிடப்பட்டதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவம் நடந்த இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். அங்கு இறந்துகிடந்தவரின் உடலை கைப்பபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர.

Mentally ill men death: Writer Francis Krupa is innocent; says chennai police

உயிரிழந்த நபர் குறித்து எந்ததகவலும் கிடைக்காத நிலையில். உடலின் அருகே இருந்த நபரை கொலை செய்த வழக்கில் கைது செய்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் தனது பெயர் பிரான்சிஸ் கிருபா என்றும், தனது ஊர் திருநெல்வேலி என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பிரபல எழுத்தாளர் என்பது தெரியவந்தது.

இவர் பல புதினங்கள், பல்வேறு கவிதை தொகுப்புகள், சினிமா பாடல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளதும் சுஜாதா விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றவர் என்பதும் தெரிய வந்ததது. மேலும் இளையராஜா இசையில் அழகர்மலை படத்தில் குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி உள்பட சில சினிமா பாடல்களை பிரான்சிஸ் கிருபா எழுதி இருப்பதும், தெரியவந்தது. இதனால் இலக்கிய வட்டாரத்திலும், சினிமா துறையிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. இதன்படி மனநலம் பாதித்த நபர், வலிப்பு வந்து மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையாவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மனநலம் பாதித்தவரின் இறப்புக்கும் பிரான்சிஸ் கிருபா காரணமில்லை என்றும் அவர் நிரபாரதி என்றும் கூறி போலீசார் விடுவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+