29 நாளில் 2வது முறை.. திடீரென முடங்கிய வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம்.. கொதித்துப்போன மக்கள்!
சென்னை: இந்தியா உள்பட உலகம் முழுவதும் இன்று திடீரென்று வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கின. கடந்த 29 வது நாளில் இது இரண்டாவது முறை என்பதால் நெட்டிசன்கள் கொதித்துப்போய் எக்ஸ் பக்கத்தில் மீட்டா நிறுவனத்தை திட்டி தீர்த்தனர்.
தற்போது நாம் அனைவரும் ஆன்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைதள செயலிகளை பயன்படுத்தி வருகிறோம்.
இதில் அதிகமானவர்கள் மீட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தான் இன்று இரவு சுமார் 11.45 மணிக்கு உலகம் முழுவதும் பலருக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடங்கின.

அதாவது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வழக்கத்தை விட மெதுவாக இயங்க தொடங்கியது. மேலும் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலராலும் உள்ளே நுழைய முடியவில்லை. டெஸ்க்டாப்பிலும் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய முடியவில்லை. அதோடு டெஸ்க்டாப்பில் ஓபன் செய்திருந்த வாட்ஸ்அப்பும் Error என காட்டியது.
இதனால் நெட்டிசன்கள் கடும் கோபமடைந்தனர். மேலும் Whatsappdown எனும் ஹேஷ்டேக்கில் அவர்கள் தங்களின் பிரச்சனைகளை பதிவிட தொடங்கினர். மேலும் அந்த ஹேஷ்டேக்கில் மீட்டா நிறுவனத்தை திட்டி தீர்த்ததோடு, அந்த நிறுவனத்தை கிண்டல் செய்யும் வகையிலான போட்டோக்களை பதிவிட்டனர்.
இதையடுத்து உடனடியாக வாட்ஸ்அப் நிறுவனம், ‛‛சில மக்கள் வாட்ஸ்அப்பில் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. 100 சதவீதம் அனைவரும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும்'' என தெரிவித்தது. அதன்படி படிப்படியாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மீண்டும் செயல்பட தொடங்கியது. இருப்பினும் எந்த காரணத்தினால் உலகம் முழுவதும் இந்த பிரச்சனை வந்தது என்பது தெரியவில்லை.
முன்னதாக கடந்த மாதம் 5ம் தேதி மெட்டா நிறுவனத்தின்ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் முடங்கின. ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தால் தானாகவே ‛லாக் அவுட்' ஆகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தால் முகப்பு பக்கம் தெரியாமல் உள்ளது. Refresh செய்தாலும் கூட Couldn't Refresh feed என வந்தது. அதன்பிறகு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது. தற்போது 2வது முறையாக இந்த மாதமும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரச்சனை ஏற்பட்டது. அதன்பிறகு பிரச்சனை சரி செய்யப்பட்டது. இந்நிலையில் தான் 29வது நாளில் 2வது முறையாக மீட்டா நிறுவனத்தின் வலைதள பக்கங்கள் பிரச்சனையை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications