‛‛மொத்தமும் போச்சு’’.. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் வலைதளங்கள் முடங்கியது.. என்ன காரணம்?
சென்னை: உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்களின் சேவைகள் முடங்கி உள்ளன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்து வரும் நிலையில் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பிரச்சனையை சரிசெய்வதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்களை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 3 வலைதளங்களும் மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று 8.45 மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்கள் திடீரென்று முடங்கி உள்ளன.

அதாவது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதள பக்கங்களை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பக்கத்தை திறந்தால் தானாகவே ‛லாக் அவுட்' ஆகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தால் முகப்பு பக்கம் தெரியாமல் உள்ளது. Refresh செய்தாலும் கூட Couldn't Refresh feed என வருகிறது.
அதேபோல் எக்ஸ் பக்கத்துக்கு போட்டியாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் வலைதள பக்கமும் முடங்கி உள்ளது. த்ரெட்ஸ் பக்கத்தை திறந்தால் ‛Sorry, Something went Wrong. Try Again' என வருகிறது. இதனால் இந்த 3 வலைதள பக்கங்களையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் ஆகிய 3 வலைதளங்களும் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இதனால் மெட்டா நிறுவனத்தின் முக்கிய சர்வரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை மெட்டா நிறுவனம் அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதனால் இந்த வலைதள பக்கங்களை பயன்படுத்தும் மக்கள் குழம்பி போய் உள்ளனர். அதோடு எக்ஸ் பக்கத்தில், Instagramdown எனம் ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் மெட்டா நிறுவனம் மற்றும் மார்க் ஜுகர்பெர்க்கை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அண்டி ஸ்டோன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எங்களின் சேவையை பயன்படுத்த முடியாமல் மக்கள் பிரச்சனையை எதிர்கொள்வதை நாங்கள் அறிந்துள்ளோம். அந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் பணி செய்து வருகிறோம்'' என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications