Engagement: காதலியுடன் வசமாக சிக்கிய மகன்.. ஸ்பாட்டிலேயே நிச்சயம் செய்து வைத்த தாய்.. கடைசியில் மேட்டரே வேறயாமே
சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் பேசிக்கொண்டு இருந்த மகனை கையும் களவுமாக பிடித்த தாய்.. அதே ஸ்பாட்டில் நிச்சயம் செய்து வைத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட இந்த வீடியோவை வைத்து விசாரித்து பார்த்தால் அங்கு நடந்த விஷயமே வேறு என்பது தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு டிரெண்டிங் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல ஒரு வீடியோ ஒன்று பரவி வந்தது.

ஸ்பாட்டிலேயே நிச்சயதார்த்தம் செய்து வைத்த தாய்
மெட்ரோ ரயில் நிலையத்தில் காதலியுடன் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொஞ்சி பேசிக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவரை அவரது தாயார் எதேச்சையாக ரயில் நிலையத்தில் பார்த்துள்ளார். மகன் காதலியுடன் அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த தாய். குடும்ப கவுரவம் என்னாவது என்று மகனை கண்டித்தார்.
அந்த பெண் யார்.. அவரைப் பற்றிய விவரங்களை கேட்ட இளைஞரின் தாய், வீட்டிற்கு வாங்கி சென்ற பழங்கள் மற்றும் பூக்களை அந்த பெண்ணிடம் கொடுத்து, கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த இடத்திலேயே இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தார். இந்து சம்பிரதாயப்படி நிச்சயம் செய்து வைத்தார். தொடர்ந்து காதல் ஜோடிகள் தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
டிரெண்ட் ஆன வீடியோ
காதலியுடன் இருந்த இளைஞரை பார்த்து தாயார் செய்த காரியம் வைரல் டிரெண்ட் ஆனது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக கூறிய சிலரும், தங்கள் மகன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் முதலில் கொஞ்சம் கோபப்பட்டாலும் பிறகு இருவரிடம் நிதானமாக கேட்டு, இனிமேல் உங்களை மன்னிக்க முடியாது.
🚨 Mother caught her son with his girlfriend at a metro station.
— News Algebra (@NewsAlgebraIND) February 7, 2026
She immediately arranged his engagement on spot 😂
Intelligent Mom settled the issue in one go, ending the need for excuses or secret meetings. pic.twitter.com/xyk3lYdgqu
இப்படி ரகசியமாக சந்திப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த நிகழ்வு எப்போது நடைபெற்றது.. எந்த மெட்ரோ ஸ்டேஷனில் நடைபெற்றது என்ற விவரம் எதுவும் இல்லை. ஆனால் இன்ஸ்டகிராமில் அதிக அளவு பார்வையாளர்களையும் கமெண்டுகளையும் பெற்று இந்த வீடியோ வைரல் ஆகி வந்தது.
100/100 சரி என கமெண்ட்
பொது இடங்களில் எல்லை மீறும் காதலர்களுக்கு இதுவே சரியான பாடம்.. அந்த தாயார் செய்த செயல் 100/100 சரி என்று நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதுபோல பெற்றோர்கள் இருந்தால், இளைஞர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றும் பலரும் பதிவிட்டு வந்தனர்.
சில நெட்டிசன்களோ, இதுதான் ரியல் தக் லைஃப் மூமண்ட் என்றும் பதிவிட்டு இருந்தனர். இப்படியாக கடந்த சில நாட்களாக இணையத்தில் டிரெண்ட் ஆகி வந்த வீடியோ, உண்மையில் இது ஸ்கிரிப்ட் என்று தற்போது தெரியவந்துள்ளது. பிரபல செய்தி நிறுவனம் செய்த பேக்ட் செக்க்கில் வீடியோவை வேண்டும் என்றே வைரல் ஆக்குவதற்காக திட்டமிட்டு இப்படி பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடப்பாவிங்களா, கடைசியில் ட்விஸ்ட்
சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வரும் ஆரவ் மாவி என்பவர்தான்.. இந்த வீடியோவை முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கி பதிவிட்டு இருக்கிறாராம். உண்மை சம்பவங்கள் போன்றே சித்தரித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ போடுவதையே இவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர் வெளியிட்ட இந்த ஸ்கிரிப்டட் வீடியோவைத்தான் பலரும் உண்மை என நம்பி ஃபயர் விட்டுள்ளனர். அதேநேரத்தில் வீடியோ வெளியான அன்றே சில நெட்டிசன்கள், இந்தகாட்சிகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று போல இருக்கிறது என சந்தேகமும் எழுப்பியிருந்தனர். கடைசியில் அதுவே உண்மையாகவும் அமைந்து இருக்கிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications