உங்க கிட்ட "போன் பே" இருக்கா? phone pe-லும் டிக்கெட்.. மெட்ரோ நிறுவனம் மாஸ்.. எப்படி புக் செய்வது?
சென்னை: "போன் பே" மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. அந்த வகையில் போன் பே மூலம் எப்படி டிக்கெட் பெறுவது தெரியுமா?
சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. நெருக்கி தள்ளும் போக்குவரத்து பிரச்சினைக்கு, இந்த மெட்ரோவின் சேவை மிகப்பெரிய நிம்மதியை தந்து வருகிறது.

இப்போதைக்கு சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் ஓடுகிறது.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடம் உள்ளது. சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை காரணமாக, சென்னை மக்களும், மெட்ரோ ரயிலை நாடி வருகிறார்கள். இதனால், தேவையும் அதிகரித்து வருகிறது.
சென்னை மெட்ரோ: அதனால்தான், பயணிகளின் வசதிக்காகவே, பல்வேறு அதிரடிகளை மெட்ரோ அவ்வப்போது அறிவித்து வருகிறது. குறிப்பாக பயண அட்டை, கியூ ஆர் கோடு, வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில்கூட, பேடிஎம் ஆப்பில் டிக்கெட் பெறும் வசதியும் கொண்டுவரப்பட்டது.. இந்நிலையில், Phonepay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி பண பரிவர்த்தனை நிறுவனமாக Phonepay நிறுவனம் திகழ்ந்து வருகிறது.. இது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கியும், புதுபுது அதிரடிகளை வெளியிட்டும் வருகிறது.
குறிப்பாக, "போன் பே" (Phonepay) மூலமாகவே மொபைல் ரீசார்ஜ், பஸ்கள், ரயில்கள், விமானங்களில் டிக்கெட் புக்கிங் என ஏகப்பட்ட பணிகளை எளிதாக செய்து முடிக்கலாம். இதற்காக, Phonepay சேவைகளுக்கு தகுந்தவாறு வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் செய்து அசத்தி வருகிறது.
நேரம் மிச்சம்: இந்நிலையில், மெட்ரோவிலும் புது வசதியை கொண்டுவந்துள்ளது.. Phonepay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதியை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்காகவே சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.. இந்நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொல்லும்போது, "போன்பே நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. இது பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது. இந்த சேவைக்கு தற்போதுள்ள 20 சதவீத கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுகிறது" என்றார்.
இரட்டிப்பு மகிழ்ச்சி: மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் டிக்கெட்களை பெரும்படியாக இருந்த நிலையில், இப்போது சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் Phonepay மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் என்ற இந்த அறிவிப்பானது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. அத்துடன், பயனர்களுக்கு 20 சதவீதம் வரைக்கும் கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்படுவதாக அறிவித்திருப்பது, இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
எப்படி புக் செய்வது: இந்த செயலியில், சுவிட்சில் சிங்கிள் மற்றும் ரிட்டன் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் பாஸ் வாங்குதல் மற்றும் ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்தல் ஆகிய 3 முக்கிய சேவைகளை பயணிகளுக்கு படிப்படியாக செயல்படுத்த உள்ளது..
இதில், முதற்கட்டமாக "சுவிட்சில் சிங்கிள்" பயண டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. போன் பே செயலியில் transit பகுதியில் சென்னை மெட்ரோ ரீசார்ஜ் option உள்ளது. அதில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து பணம் செலுத்தி டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஒரு முன்பதிவில் அதிகபட்சம் 6 டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.
புதிய டிக்கெட்: இதுகுறித்து, மெட்ரோ தொலைத் தொடர்பு மற்றும் சமிக்கை ஆலோசகர் மனோகரன் சொல்லும்போது, “மக்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு, என்சிஎம்சி கார்டு, க்யூ ஆர் டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டன. தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட க்யூ ஆர் டிக்கெட் விற்கப்படுகின்றன..
காகித டிக்கெட்டுகளை குறைக்க வேண்டும் என்பதால், காகிதம் இல்லா க்யூ ஆர் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காகித டிக்கெட்டுகளை குறைப்பதற்காகவே, போன் பே செயலி மூலம் டிக்கெட் புக்கிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications