வடபழனி வரை எல்லாமே மாறுது.. பூந்தமல்லி- போரூர் மெட்ரோ ரயில் சேவையை கவனித்தீர்களா?
சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணியில் விறுவிறுப்பாக வேலைகள் நடக்கிறது. இதில் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வர திட்டமிட்டார்கள்.

இதற்காக பூந்தமல்லி போரூர் இடையே சோதனை ஓட்டம் ஆகஸ்ட் மாதம் நடந்தது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கி பார்க்கப்பட்டது. அப்போது, பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளில் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடந்தது மேலும், இந்த வழித்தடத்தில் 3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் மூலம் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இன்னொரு புறம் போரூர் மற்றும் வடபழனி இடையேயும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பாதையை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பூந்தமல்லி, வடபழனி இடையே முழுபாதை நெடுகிலும் சுமார் 4,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 தொழிலாளர்கள் மேம்பால மற்றும் தளத் தகடு கட்டுமானப் பணிகளிலும், 600 பேர் தண்டவாளம் அமைக்கும் பணிகளிலும், மீதமுள்ள 400 பேர் இழுவை மற்றும் சிக்னல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பூந்தமல்லி வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்க சென்னை மெட்ரோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்து வேலை செய்து வருகிறது.
இது ஒருபுறம் எனில், ஏற்கனவே சோதனை ஓட்டம் நடந்து முடிந்த போதிலும், பூந்தமல்லி போரூர் இடையே மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்காமல் இருந்தது. இதனால், திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் இவ்வழித்தடத்தில் சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் தற்போது வழங்கியுள்ளது. பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியிருப்பதன் மூலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
பூந்தமல்லி முதல் போரூர் வரை ஸ்டேஷ்ன்கள் எல்லாவற்றிலும் ரயில்கள் நிற்கும் ஆனால். போரூக்கு அடுத்து உள்ள எந்தஸ்டேஷனிலும் ரயில்கள் நிற்காமல் நேரடியாக வடபழனியில் வந்து நிற்கும்.. இது ஆரம்பகட்டம் தான். பணிகள் முடிந்த பின்னர், படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நின்று செல்லும்.
இதற்கான பணிகளை சென்னை மெட்ரோ வேகமாக செய்து வருகிறது. வடபழனி-போரூர் பகுதிக்கு, ரயில்வே வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பிடமிருந்து அனுமதி பெறுவது எளிது என்பதால், உடனே அனுமதி கிடைத்துவிடும் என்கிறார்கள். எனவே பூந்தமல்லி வடபழனி இடையே மெட்ரோ ரயில் பிப்ரவரி மாதம் கண்டிப்பாக ஒடும் என எதிர்பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications