சென்னை மாநகராட்சியை தாண்டும் மெட்ரோ வாட்டர், தாம்பரம், ஆவடிக்கும் வரப்போகும் நல்ல விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லையைத் தாண்டி, சென்னை பெருநகரப் பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் சேவைகளை விரிவுபடுத்த சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (சென்னை மெட்ரோ வாட்டர்) திட்டமிட்டிருக்கிறது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரித்துள்ளது சென்னை மெட்ரோ வாட்டர் அமைப்பு, தமிழக அரசின் ஒப்புதலுக்காக திட்டமிடல் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறதாம்.

ஷா டெக்னிக்கல் கன்சல்டன்ட்ஸ் என்ற ஆலோசனை நிறுவனம் சென்னை பெருநகரப் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்துள்ளது. 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த விரிவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பெருநகரப் பகுதியின் எல்லை தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், 2060-ம் ஆண்டில் சென்னை பெருநகரப் பகுதியின் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 2,212 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சராசரியாக சென்னை மாநகராட்சிக்கு நாள்தோறும் 1,143 மில்லியன் லிட்டர் (MLD) குடிநீரை விநியோகம் செயகிறது.

Metro Water to expand beyond Chennai Corporation limits Good news for Tambaram and Avadi

சேவைகள் விரிவாக்கம்

குறிப்பிட்ட விரிவான சாத்தியக்கூறு அறிக்கையில், ஏற்கெனவே உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன. மேலும், தற்போதுள்ள உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள், நீர் ஆதாரங்களின் இருப்பு, எதிர்காலக் குடிநீர் தேவை, விநியோகத்தில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை, கூடுதல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தேவை, கழிவுநீரைச் சேகரித்து சுத்திகரிப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. விரைவில் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி, பரங்கிமலை உள்ளிட்ட பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தனது சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு கையில்

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், ரிங் மெயின் குழாய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. அதேநேரம் குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்துவது குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. எனினும் தமிழக அரசு எடுக்கும் முடிவின் படி நிர்வாகம் செயல்படும் என்று சொல்கிறார்கள். இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்த பின்னரே சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் விரிவான திட்டத்தைத் தயாரிக்கும் என்கிறார்கள்.

ஏன் விரிவாக்கம் அவசியம்

சென்னை பெருநகரப் பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் கட்டுமான வளர்ச்சிக்கு ஏற்ப, முறையான குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை விரிவுபடுத்துவது முக்கியம் ஆகும். தற்போது உள்ள சூழலில் சென்னையை சுற்றியுள்ள ஊராட்சிகளில் அதிக அளவு குடியிருப்புகள் உருவாகிவிட்டன. ஆனால் சிறிய ஊராட்சிகளால்
அதற்கேற்ப அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியவில்லை. தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் கூட புதிதாக இணைந்த பகுதிகளில் பல்வேறு சேவைகளை விரைவாக வழங்க இன்று வரை தடுமாறுகிறது. சென்னை மாநகராட்சியுடன் 2011ல் இணைந்த மடிப்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றும் கூட பாதாள சாக்கடைமற்றும் குடிநீர்குழாய் பதிக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியவில்லை.

புறநகரில் கூடுதல் தண்ணீர் ஆதாரங்கள்

எனவே சென்னை புறநகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவது, குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளில் ஒரே மாதிரியான தரத்தை உறுதிப்படுத்துவது உள்ளிட்டவற்றை சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் மேற்கொண்டால் பணிகள் வேகமெடுக்கும் என நம்பப்படுகிறது. தற்போதைய நிலையில் நீர் பாதுகாப்புத் திட்டத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட சில முக்கியமான நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தவும் மெட்ரோ வாட்டர் திட்டமிட்டுள்ளது.வரும் காலத்தில் தண்ணீர் வழங்குவதற்காக கூடுதலாக 173 நீர் ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 1,596 மில்லியன் லிட்டர் தண்ணீரைப் பெற முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள ஏரிகளின் கொள்ளளவை அதிகரிப்பது, புதிய நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உருவாக்குவது, ஆற்றுப்படுகைகளில் நீர்த்தேக்கங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நீர் ஆதாரங்களை அதிகரிக்க நீர்வளத் துறை திட்டமிட்டு வருகிறாரர்கள். அத்துடன், பாலாறு மூலம் நாளொன்றுக்கு 51 மில்லியன் லிட்டர் குடிநீரைப் பெறுவதற்கு தாம்பரம் மாநகராட்சி திட்டங்களை தயாரித்துள்ளது.

எவ்வளவு குடிநீர்

சென்னை பெருநகரப் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகள் என்பது 81.60 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. இது 426 சதுர கி.மீ அளவில் தான் வழங்கப்படுகிறது. சராசரி தினசரி குடிநீர் விநியோகம் 1,143 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. தொழிற்சாலைகளுக்கான குடிநீர் விநியோகம் நாளொன்றுக்கு 14 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. ஒட்டுமொத்மாக நாளொன்றுக்கு சுமார் 42 மில்லியன் லிட்டர் தேவைப்படுகிறது.

2060ல் எப்படி இருக்கும்

சென்னை பெருநகரப் பகுதியில் 2060-ம் ஆண்டில் 1.24 கோடி மக்களுக்கு சேவை வழங்கப்பட உள்ளது. தற்போதைய மதிப்பிடப்பட்ட குடிநீர்த் தேவை 827 மில்லியன் லிட்டர் ஆக அப்போது இருக்கும். - 2060-ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் குடிநீர்த் தேவை 2,212 மில்லியன் லிட்டர் ஆக இருக்கும். விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள பரப்பளவு 1,189 சதுர கி.மீ. ஆகும்.
விரிவாக்கத் திட்டத்தில் பரங்கிமலை பூந்தமல்லி, திருமழிசை, குன்றத்தூர், மீஞ்சூர், காட்டாங்குளத்தூர் வரை இருக்கும் என்கிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+